பல்வேறு இடங்களில் 10 செ.மீ.க்கு மேல் மழைப்பதிவு: சென்னை வானிலை ஆய்வு மையம்
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் பல இடங்களில் 10 செ.மீ.க்கு மேல் மழை பதிவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் இரண்டு நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இதன் காரணமாக சென்னை உள்ளிட்ட பல கடலோர மாவட்டங்களில் நேற்று முதல் கனமழை நீடித்து வருகிறது.
அந்த வகையில் கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் அதிகபட்சமாக பதிவான மழை நிலவரம்:
ஆவடியில் 20 செ.மீ., சோழவரத்தில் 15 செ.மீ., திருவள்ளூரில் 13 செ.மீ., செம்பரம்பாக்கத்தில் 12 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
மாமல்லபுரம், செங்கல்பட்டு பகுதியில் 18 செ.மீ. மழை பதிவானது. அம்பத்தூரில் 12 செ.மீ. மழையும், பெரம்பூரில் 10.செ.மீ. மழையும் பதிவானது.
அயனாவரம், மெரினாவில் 10 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. திருக்கழுக்குன்றத்தில் 16 செ.மீ. மழை பதிவானது.
இவ்வாறு சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
