‘அனைத்திந்திய பாட்டாளி முன்னேற்ற கட்சி’: புதிய கட்சி தொடக்கம்

‘அனைத்திந்திய பாட்டாளி முன்னேற்ற கட்சி’: புதிய கட்சி தொடக்கம்
Updated on
1 min read

தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், புதிய அரசியல் கட்சிகள் தொடங்கப்பட்டு வருகின்றன. வன்னியர் சங்கத்தின் பொதுச்செயலாளராக இருந்த சி.என்.ராமமூர்த்தி ‘அனைத்திந்திய பாட்டாளி முன்னேற்ற கட்சி’ என்ற அரசியல் கட்சியை நேற்று தொடங்கி, கட்சி கொடியையும் அறிமுகப்படுத்தினார். பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: ஏழை, எளிய மக்கள், உழைக்கும் மக்கள் ஆட்சி அதிகாரத்தில் பங்கேற்கும் வகையில் அனைத்திந்திய பாட்டாளி முன்னேற்ற கட்சியை தொடங்கியுள்ளோம்.

அடுத்த வாரம் சென்னையில் எங்கள் கட்சியின் தொடக்க விழா நடக்கவுள்ளது. வரும் சட்டப்பேரவை தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிடுவோம். இதுகுறித்து விரைவில் அறிவிப்போம். மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த அன்புமணி புதிய மருத்துவ கல்லூரி தொடங்குவதில் முறைகேடு உட்பட பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகியுள்ளார். இவர் எப்படி முதல்வர் வேட்பாளராக இருக்க முடியும்? வரும் சட்டப்பேரவை தேர்தலில் பாமகவின் மாற்றம், முன்னேற்றம் பெரும் ஏமாற்றத்தில்தான் முடியும். இவ்வாறு அவர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in