ஹோமியோபதி மருத்துவர் இடமாறுதல் கலந்தாய்வு நடத்தலாம்: உயர் நீதிமன்றம் உத்தரவு

ஹோமியோபதி மருத்துவர் இடமாறுதல் கலந்தாய்வு நடத்தலாம்: உயர் நீதிமன்றம் உத்தரவு
Updated on
1 min read

இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி மருத்துவர்கள் கலந்தாய்வு நடத்தலாம். ஆனால், கலந்தாய்வு முடிவுகள் நீதிமன்றத்தின் இறுதி தீர்ப்புக்கு கட்டுப்படும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மதுரை திருமங்கலத்தைச் சேர்ந்த மருத்துவர் ஜெயந்தி, உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு:

திண்டுக்கல் மாவட்ட அரசுமருத்துவமனையில் ஹோமியோபதி உதவி மருத்துவ அலுவலராக பணிபுரிகிறேன். இந்தியமருத்துவம் மற்றும் ஹோமியோபதி மருத்துவர்களுக்கான இடமாறுதல் கலந்தாய்வு நவ.10முதல் நடைபெறும் என ஜூலை மாதம் அறிவிப்பு வெளியானது.

நான் திருமங்கலம் அரசு ஹோமியோபதி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு இடமாறுதல் கேட்டேன். தற்காலிகமாக திருமங்கலத்துக்கு பணி மாறுதல் செய்யப்பட்டேன். இந்நிலையில் எனக்கு இடமாறுதல் கலந்தாய்வில் பங்கேற்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

எனவே இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி மருத்துவர்கள் இடமாறுதல் கலந்தாய்வுக்கு தடை விதித்து,திருமங்கலம் அரசு ஹோமியோபதி மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் எனக்காக ஒரு பணியிடத்தை காலியாக வைக்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் புஷ்பா சத்யநாராயணா, வேல்முருகன் அமர்வில் விசாரணைக்கு வந்தது.

பின்னர் நீதிபதிகள், இந்தியமருத்துவம் மற்றும் ஹோமியோபதி மருத்துவர்களுக்கான இடமாறுதல் கலந்தாய்வை நடத்தலாம். கலந்தாய்வின் இறுதி முடிவுநீதிமன்ற தீர்ப்புக்கு கட்டுப்பட்டது. மனு தொடர்பாக இந்தியமருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறை இணை இயக்குநர் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை டிச.10-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in