Published : 26 Nov 2021 05:37 PM
Last Updated : 26 Nov 2021 05:37 PM

அரசியலமைப்புச் சட்ட தினம்; இந்தியாவை உயர்த்துவோம்: ராமதாஸ் வாழ்த்து

சென்னை

அம்பேத்கரால் வகுக்கப்பட்டது; சட்டத்தை மதித்து நடப்போம் என்று இந்திய அரசியலமைப்புச் சட்ட தினத்திற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை ஏற்றுக்கொண்ட நாளாக கடந்த 2015-ம் ஆண்டிலிருந்து நவம்பர் 26-ம் தேதியை அரசியலமைப்புச் சட்ட நாளாக மத்திய அரசு கொண்டாடி வருகிறது. அவ்வகையில் அரசியலமைப்புச் சட்ட நாளான இன்று பிரதமர் மோடி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

இதுகுறித்து பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தனது ட்விட்டர் பதிவுகளில் கூறியுள்ளதாவது:

''அண்ணல் அம்பேத்கரால் வகுக்கப்பட்ட இந்திய அரசியலமைப்புச் சட்டம் 1949ஆம் ஆண்டு ஏற்றுக்கொள்ளப்பட்ட நாளான இந்திய அரசியலமைப்புச் சட்ட நாளில் இந்தியக் குடிமக்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்!

இந்தியாவில் அனைத்தையும் விட உயர்ந்தது அரசியலமைப்புச் சட்டம்தான். இந்தியாவை இயக்குவது அரசியலமைப்புச் சட்டம்தான். இறையாண்மை அளிப்பதும் அரசியலமைப்புச் சட்டம்தான். அத்தகைய சிறப்பு மிக்க அரசியல் சட்டத்தை மதித்து நடப்போம். இந்தியாவை உயர்த்துவோம்''.

இவ்வாறு ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x