Published : 21 Mar 2016 10:09 AM
Last Updated : 21 Mar 2016 10:09 AM

தமிழகம் முழுவதும் அனைத்து காவல் நிலையங்களிலும் ஏப். 15 முதல் கணினி வழி எஃப்ஐஆர்- எழுத்தர், கணினி இயக்குபவருக்கு பயிற்சி

காவல் நிலையங்களில் போலீஸார் கையால் எஃப்ஐஆர் எழுதுவதற்கு விடை கொடுக்கும் வகையில், இனிமேல் கணினி எஃப்ஐஆர் வழங்கும் திட்டம் ஏப்ரல் 15-ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் உள்ள காவல் நிலையங்களில் நடைமுறைக்கு வர உள்ளது. இதற்காக அந்தந்த காவல் நிலைய தலைமை எழுத்தர், கணினி இயக்குபவருக்கு பயிற்சி வழங்கப்படுகிறது.

காவல் துறையை நவீனமயமாக் குவதன் மூலம் குற்றவாளிகளின் பின்புலங்களை ஆன்லைன் மூலம் இந்தியாவின் எந்த மூலையில் இருந்தும் தெரிந்து கொள்ள ஒருங்கிணைந்த வலைப்பின்னல் திட்டம் (Crime Criminal Tracking Network system) உருவாக்கப்பட்டுள்ளது. இதில் தமிழ்நாடு அரசு காவல் துறை யில் சிப்ரஸ் (Common Integrated Police Record Updation System) எனும் ஒருங்கிணைந்த வலைப்பின்னல் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

தற்போது காவல் நிலையங் களில் உள்ள எஃப்ஐஆர்களை ஆன் லைனில் பதிவேற்றி ஆவணப்படுத்தி வருகின்றனர். காவல் நிலைய எழுத்தர் (ரைட்டர்) எஃப்ஐ ஆரை தற்போது வரை கையால் எழுதி வருகிறார்.

சோதனை முயற்சி வெற்றி

காவல் துறையை நவீனப்படுத் தவும், துரிதமாகப் பணிகள் மேற்கொள்ளவும் சிப்ரஸ் மூலம் ஆன்லைன் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதையடுத்து கணினி வழி எஃப்ஐஆர் வழங்கும் திட் டம் ஏப்ரல் 15-ம் தேதி முதல் நடைமுறைக்கு வர உள்ளது.

இதுகுறித்து ஒருங்கிணைந்த வலைப்பின்னல் திட்ட போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:

தமிழகத்தில் முதல் முறையாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஆன் லைன் மூலம் எஃப்ஐஆர் வழங்கும் திட்டம் 5 மாதங்களுக்கு முன்பிருந்து சோதனை அடிப்படையில் செய்து பார்க்கப்பட்டது. அது வெற்றிகரமாக அமைந்ததால் தமிழகம் முழுவதும் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. நீதித்துறையும் கணினி வழியில் எஃப்ஐஆர் வழங்கலாம் என அறிவுறுத்தியுள்ளது.

ஆன்லைனில் எஃப்ஐஆர்

கணினி மூலம் எஃப்ஐஆர் வழங் குவதற்காக எழுத்தர், கணினி இயக்குபவருக்கு பயிற்சி அளித்து வருகிறோம். தற்போது ஆன்லைன் மூலம் சிஎஸ்ஆர் ரசீது வழங்கி வரு கிறோம். இனிமேல் எஃப்ஐஆரும் வழங்கப்பட உள்ளன.

இதில் டைப்-1, டைப்-2 என இருவகை உள்ளது. டைப்-1 என் பது முழுக்க முழுக்க கணினி வழியாக ஏ-4 அளவில் எஃப்ஐஆர் பிரின்ட் அவுட் எடுக்கப்படும். ஒவ்வொன்றுக்கும் கிரைம் எண் வழங்கப்படும். அந்த எண்ணை வைத்து தமிழகத்தில் எந்த மூலை யில் இருந்தும் கிரைம் விவரங்களை தெரிந்து கொள்ளலாம். கிரைமில் சம்பந்தப்பட்டவர்கள் பற்றியும் அனைத்து அடையாளங்களையும் தெரிந்து கொள்ளலாம்.

கணினி பழுது மற்றும் தவிர்க்க முடியாத காரணங்களால் பிரின்ட் அவுட் எடுக்க முடியாதபட்சத்தில், துறையால் வழங்கப்பட்டுள்ள ஏ-4 பேப்பரில் (பின்னணியில் அரசு முத்திரை இருக்கும்) கையால் எழுதி எஃப்ஐஆர் வழங்குவது டைப்-2 எனப்படும்.

வரும் காலங்களில் நீதித்துறை, சிறைத்துறை, தடயவியல் ஆய்வுத் துறையும் இந்த வலைப்பின்னலில் இணையவுள்ளன. இதன்மூலம் வழக்கு, குற்றவாளியின் அனைத்து விவரங்களையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x