கூட்டணி அறிவிப்பும் தொண்டர்கள் உற்சாகமும்

கூட்டணி அறிவிப்பும் தொண்டர்கள் உற்சாகமும்
Updated on
1 min read

மக்கள் நலக் கூட்டணி தலைவர்கள் தேமுதிக அலுவலகத்துக்கு வருகிறார்கள் என்ற தகவல் பரவியதும் 5 கட்சி தொண்டர்களும், பத்திரிகையாளர்களும் காலை 8 மணிக்கே கோயம்பேட்டில் குவிந்தனர்.

* கூட்டம் அதிகரிக்கவே, அங்கிருந்த 2 இரும்பு தடுப்புகளை நுழைவாயிலில் வைத்த தேமுதிக நிர்வாகிகள், அவற்றை சங்கிலியால் பூட்டி வெளியாட்கள் நுழையாமல் தடுத்தனர்.

* தேமுதிக அலுவலகத்துக்குள் பத்திரிகையாளர்கள் அனுமதிக் கப்படவில்லை. நிருபர்கள், புகைப் படக் கலைஞர்கள், வீடியோ கிராபர்கள் என நூற்றுக்கணக் கானவர்கள் வெளியே நீண்ட நேரம் காத்துக்கிடந்தனர்.

* வைகோ உள்ளிட்ட தலை வர்கள் காலை 9.56 மணிக்கு தேமுதிக அலுவலகத்துக்கு வந்தனர். மிகுந்த உற்சாகமாக காணப்பட்ட வைகோ, தேமுதிக தலைமை நிலையச் செயலாளர் பார்த்தசாரதியின் கைகளை பிடித் துக் கொண்டு ‘நாம ஜெயிக்கு றோம்’ என்று உணர்ச்சி பொங்க கூறினார்.

* கூட்டணி அறிவிப்பு வெளி யானதும் தேமுதிக அலுவலகம் முன்பு திரண்டிருந்த அக்கட்சி நிர்வாகிகள் கோஷங்களை எழுப்பி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

* தேமுதிக மாவட்டச் செய லாளர்கள் சிலர் சரவெடி களை கொளுத்தினர். அந்த வழியாக வாகனங்களில் சென்ற வர்களுக்கு இனிப்புகள் வழங்கப் பட்டன.

* ம.ந.கூட்டணி தலைவர்கள் சுமார் இரண்டரை மணி நேரத் துக்கு பிறகு 12.30 மணியளவில் வெளியே வந்தனர். அவர்களை தொண்டர்களும், பத்திரிகையாளர் களும் சூழ்ந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

* தனித்துப் போட்டி என்று அறி வித்த பிறகு கட்சி அலுவலகத் துக்கே வராமல் இருந்த தேமுதிக தொண்டர்கள், கூட்டணி அறிவிப்பு வெளியானதும் நூற்றுக்கணக்கில் அலுவலகம் முன்பு குவிந்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in