Published : 25 Nov 2021 10:45 PM
Last Updated : 25 Nov 2021 10:45 PM

11வது மெகா தடுப்பூசி முகாமில் 12.01 லட்சம் பயனாளிகளுக்கு தடுப்பூசி: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்ற 11வது மெகா கோவிட்- 19 தடுப்பூசி முகாமில் 12.01 லட்சம் பயனாளிகள் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அரசு செய்திக் குறிப்பில், "தமிழக முதல்வரின் உத்தரவுப் படி தமிழ்நாட்டில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் மற்றும் முக்கிய இடங்களில் மெகா கோவிட் தடுப்பூசி பணிகள் நடைபெற்றது.

இம்மையங்களில் 18 வயதிற்கு மேற்பட்ட அனைத்து பயனாளிகளுக்கும் கோவிட் தடுப்பூசி முதல் மற்றும் இரண்டாம் தவணையும் அளிக்க திட்டமிடப்பட்டது. இதுவரை நடைபெற்ற பத்து மெகா கோவிட் தடுப்பூசி முகாம்களில் 1 கோடியே 94 இலட்சம் பயனாளிகள் பயனடைந்துள்ளார்கள்.

வடகிழக்கு பருவ மழை காரணமாக 18 மாவட்டங்களில் மழை பெய்த போதிலும், இன்று (25-11-2021) நடைபெற்ற 11வது மெகா கோவிட் தடுப்பூசி சிறப்பு முகாம்களில் 12,01,832 பயனாளிகளுக்கு கோவிட் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது.

இதில் முதல் தவணையாக 4,52,969 பயனாளிகளுக்கும் இரண்டாவது தவணையாக 7,48,863 பயனாளிகளுக்கும் கோவிட் தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை 77.02 % முதல் தவணையாகவும் 41.60% இரண்டாம் தவணையாகவும் கோவிட் தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x