

மணிமுத்தாறு அணையிலிருந்து 26.11.2021 முதல் 31.03.2022 முடிய 126 நாட்கள் பிசான பருவ சாகுபடி செய்வதற்காக தண்ணீர் திறந்துவிட அரசு ஆணையிட்டுள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், "மணிமுத்தாறு அணையிலிருந்து நடப்பாண்டிற்கான (2021-2022) முன்னுரிமை பகுதியான 1-வது மற்றும் 2-வது ரீச்சுகளை சார்ந்த 11,134 ஏக்கர் மறைமுக பாசனப்பரப்புகளுக்கு 26.11.2021 முதல் 31.03.2022 முடிய 126 நாட்கள் பிசான பருவ சாகுபடி செய்வதற்காக தண்ணீர் திறந்துவிட அரசு ஆணையிட்டுள்ளது.
இதன் மூலம் திருநெல்வேலி மாவட்டத்தில் அம்பாசமுத்திரம், சேரன்மகாதேவி, நாங்குநேரி மற்றும் பாளையங்கோட்டை வட்டங்களில் உள்ள 11,134 ஏக்கர் மறைமுக பாசன நிலங்கள் பாசன வசதி பெறும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.