Published : 24 Nov 2021 17:39 pm

Updated : 24 Nov 2021 17:40 pm

 

Published : 24 Nov 2021 05:39 PM
Last Updated : 24 Nov 2021 05:40 PM

உதவி தோட்டக்கலை அலுவலர் பணிக்கான சான்றிதழ் சரிபார்ப்பு : சென்னையில் டிசம்பர் 8-ம் தேதி முதல் தொடக்கம் 

help-horticulture-officer-certificate-verification-for-work-starting-from-8th-december-in-chennai

சென்னை

உதவி தோட்டக்கலை அலுவலர் பணிக்கான சான்றிதழ் சரிபார்ப்பு டிசம்பர் மாதம் நடைபெறவுள்ளதாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.

இது குறித்து அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில்;

"தமிழ்நாடு தோட்டக்கலை சார் நிலைப் பணிகளில் அடங்கிய உதவி தோட்டக்கலை அலுவலர் பதவிக்கு நேரடி நியமனம் செய்யும் பொருட்டு தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம், 05.02.2021 நாளிட்ட அறிவிக்கை எண்:02/2021 - ன் வாயிலாக விண்ணப்பங்களைக் கோரியிருந்தது. இப்பதவிக்கான எழுத்துத்தேர்வு கடந்த 17.04.2021 அன்று நடைபெற்று, எழுத்துத்தேர்வில் விண்ணப்பதாரர்கள் பெற்ற மதிப்பெண் மற்றும் தரவரிசை விவரங்கள் 23.09.2021 அன்று தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டது.

இத்தெரிவு தொடர்பான மூலச் சான்றிதழ்கள் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு சென்னை-03, தேர்வாணையச் சாலை (பிராட்வே பேருந்து நிலையம் மற்றும் கோட்டை ரயில் நிலையம் அருகில்) உள்ள தேர்வாணைய அலுவலகத்தில் 08.12.2021 முதல் 10.12.2021 வரையில் நடைபெற உள்ளது.

மேற்படி மூலச் சான்றிதழ்கள் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்விற்கு அழைக்கப்படும் விண்ணப்பதாரர்களின் மதிப்பெண்கள் / ஒட்டுமொத்த தரவரிசை எண், இடஒதுக்கீட்டு விது) மற்றும் காலிப்பணியிடங்களின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட தற்காலிகப் பட்டியல் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

மூலச் சான்றிதழ்கள் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்விற்கான தேதி, நேரம் மற்றும் விவரங்கள் அடங்கிய அழைப்புக்கடிதத்தினை விண்ணப்பதாரர்கள் தேர்வாணைய இணையதளமான www.tnpsc.gov.in - லிருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். கலந்தாய்விற்கு அழைக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு அதற்கான விவரம் SMS மற்றும் E-mail மூலம் தெரிவிக்கப்படும். மூலச்சான்றிதழ்கள் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்விற்கான அழைப்பாணை தனியே தபால் மூலம் அனுப்பப்படமாட்டாது எனவும் தெரிவிக்கப்படுகிறது. மூலச்சான்றிதழ்கள் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்விற்கு பங்கேற்க அழைக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் எழுத்துத்தேர்வில் அவரவர் பெற்ற மதிப்பெண்கள் / ஒட்டுமொத்த தரவரிசை / இட ஒதுக்கீட்டு விதிகள் / விண்ணப்பத்தில் அளித்துள்ள தகவல்கள் மற்றும் காலிப்பணியிடங்களுக்கு ஏற்ப கலந்தாய்விற்கு அனுமதிக்கப்படுவர்.

எனவே, அழைக்கப்படும் அனைவரும் கலந்தாய்விற்கு அனுமதிக்கப்பட்டு பணி நியமனம் வழங்கப்படும் என்பதற்கான உறுதி அளிக்க இயலாது எனவும் தெரிவிக்கப்படுகிறது. விண்ணப்பதாரர்கள் மூலச் சான்றிதழ்கள் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்விற்கு வர தவறினால் அவர்களுக்கு மறுவாய்ப்பு அளிக்கப்படமாட்டாது எனவும் தெரிவிக்கப்படுகிறது."

இவ்வாறு செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தவறவிடாதீர்!



Help Horticulture OfficerCertificate VerificationFor WorkStartingFrom 8th DecemberChennaiஉதவி தோட்டக்கலை அலுவலர்பணிக்கான சான்றிதழ் சரிபார்ப்புசென்னைடிசம்பர் 8-ம்தேதி முதல் தொடக்கம்

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x