

100 சதவீதம் தேர்ச்சி விகிதம் காட்டுவதற்காக 10-ம் வகுப்பு மாணவர்களை தேர்வு எழுத விடாமல் தடுத்ததாக, தனியார் பள்ளி மீது ஆட்சியரிடம் மாணவர்கள் சிலர் புகார் தெரிவித்தனர்.
தேனி மாவட்டம், கூடலூரில் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த 10 மாணவ, மாணவியர் மாவட்ட ஆட்சியர் என். வெங்கடாசலத்திடம் நேற்று ஒரு புகார் மனு கொடுத்தனர்.
அந்த மனுவில் கூறியிருந் ததாவது: நாங்கள் படிக்கும் மேல்நி லைப் பள்ளிக்கும், அப்பகுதியில் உள்ள மற்றொரு தனியார் பள்ளிக்கும் போட்டி உள்ளது. இதன் காரணமாக 100 சதவீதம் தேர்ச்சி காட்ட வேண்டும் என்ற நோக்கத்தில் சுமாராக படிக்கும் எங்களை போன்ற மாணவ, மாணவியரை ஆண்டுதோறும் பொதுத்தேர்வு எழுத விடாமல் பள்ளி நிர்வாகத்தினர் தடுத்து விடுகின்றனர்.
எங்களை ஜூன் மாதம் தனித்தேர்வு எழுதிக் கொள்ளும்படி கூறி விட்டனர். இதனால் நேற்று முன்தினம் 10-ம் வகுப்பு தமிழ் முதல் தாள் தேர்வு எழுதவில்லை. எங்களை தேர்வு எழுத அனுமதிக்க உத்தரவிட வேண்டும் எனக் கூறியிருந்தனர். மனுவைப் பெற்றுக் கொண்ட ஆட்சியர் உரிய விசாரணை நடத்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலருக்கு உத்தரவிட்டார். இத னையடுத்து, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வாசு பள்ளி நிர்வாகத்திடம் பேச்சுவார்த்தை நடத்தி, நாளை (இன்று) முதல் அனைத்து தேர்வுகளையும் 10 பேரும் எழுத ஏற்பாடு செய் யப்பட்டது.
இது குறித்து ‘தி இந்து’விடம் கல்வித்துறை உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:
தேர்ச்சி விகி தத்தை அதிகரித்து காட்டுவதற்காக, இந்தப் பள்ளியில் ஆண்டுதோறும் சுமாராகப் படிக்கும் மாணவர்களை அரசு பொதுத் தேர்வை எழுத அனுமதிப்பதில்லை எனத் தெரியவந்துள்ளது.
இதுதொடர்பாக சம்பந்தப்பபட்ட பள்ளியில் விரிவான விசாரணை நடத்த உத்தமபாளையம் கல்வி அலுவலருக்கு உத்தரவிடப்பட் டுள்ளது. விசாரணை முடிந்த பின்னர், சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகம் மீது நடவடிக்கை எடு க்கப்படும் என்றார்.