ஆளுநர் ஆர்.என்.ரவியுடன் ஓ.பன்னீர்செல்வம் சந்திப்பு

ஆளுநர் ஆர்.என்.ரவியுடன் ஓ.பன்னீர்செல்வம் சந்திப்பு
Updated on
1 min read

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று சந்தித்துப் பேசினார்.

தமிழக ஆளுநராக இருந்த பன்வாரிலால் புரோஹித் மாற்றப்பட்டு, கடந்த செப்.18-ம் தேதி புதிய ஆளுநராக ஆர்.என்.ரவி பொறுப்பேற்றார். ஆளுநர் பதவியேற்பு நிகழ்ச்சியில், தமிழக எதிர்க்கட்சிதலைவர் பழனிசாமி பங்கேற்றார். ஆனால், மனைவி மறைவு காரணமாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்கவில்லை.

இந்நிலையில், கிண்டியில் உள்ள ராஜ்பவனில் ஆளுநர் ஆர்.என்.ரவியை ஓ.பன்னீர்செல்வம் நேற்று சந்தித்துப் பேசினார். ஆளுநராக பதவியேற்றதற்கு வாழ்த்து தெரிவித்தார்.

தமிழகத்தின் பல்வேறு பிரச்சினைகள் குறித்த மனுவை அளித்துவிளக்கினார். அவருடன், அதிமுக அமைப்புச் செயலாளர் ஜெ.சி.டி.பிரபாகர் சென்றிருந்தார்.

இந்த சந்திப்பு குறித்து ஓ.பன்னீர்செல்வத்திடம் செய்தியாளர்கள் கேட்டபோது, ‘மரியாதை நிமித்தமாக ஆளுநரை சந்தித்தேன்’ என கூறிவிட்டு சென்றார்.

இதற்கிடைேய, ஆளுநர் ஆர்.என்.ரவி. இன்று கன்னியாகுமரிக்கு பயணம் மேற்கொள்கிறார். அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் கலந்து கொள்கிறார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in