

அதிமுக பொன்விழா ஆண்டைஒட்டி அறிவித்தபடி, ராயப்பேட்டையில் உள்ள அக்கட்சியின் தலைமைஅலுவலகத்துக்கு ‘எம்ஜிஆர் மாளிகை’ என பெயர் பொறிக்கப்பட்டது.
கடந்த 1972-ம் ஆண்டு அக். 17-ம்தேதி அதிமுக என்ற கட்சியைமுன்னாள் முதல்வர் எம்ஜிஆர்தொடங்கினார். எம்ஜிஆருக்குப் பிறகு கட்சியின் பொதுச்செயலாளராக ஜெயலலிதா இருந்தார். அவரது மறைவுக்குப் பிறகு, ஓ.பன்னீர்செல்வம், பழனிசாமி ஆகியோர் அதிமுகவை தொடர்ந்து வழிநடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த அக்.17-ம் தேதி அதிமுகவின் பொன்விழா தொடங்கியது. இதை முன்னிட்டு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி ஆகியோர் வெளியிட்ட அறிவிப்பில், ஆண்டு முழுவதும் கட்சியின் பொன்விழா கொண்டாடப்படும். ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகம் ‘எம்ஜிஆர் மாளிகை’ என்று அழைக்கப்படும் என அறிவித்தனர்.
அந்த அறிவிப்பின்படி, அதிமுக தலைமை அலுவலகத்துக்கு ‘எம்ஜிஆர் மாளிகை’ என பெயர்சூட்டப்பட்டது. அதைத் தொடர்ந்துஆங்கிலத்திலும், தமிழிலும் எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளன.
தலைமை அலுவலகத்தில் வழக்கமாக ஜெயலலிதா நின்றுதொண்டர்களைப் பார்த்து கையசைக்கும் போர்டிகோ பகுதியின்மேற்புறத்தில் பெயர் பொறிக்கப்பட்டுள்ளது.