Published : 05 Mar 2016 09:12 AM
Last Updated : 05 Mar 2016 09:12 AM

காங்கிரஸ் கட்சி மகளிரணியின் அகில இந்திய பொதுச்செயலாளராக எஸ்.விஜயதரணி நியமனம்

காங்கிரஸ் கட்சியின் மகளிரணி யின் அகில இந்திய பொதுச் செயலாளராக எஸ்.விஜய தரணி எம்.எல்.ஏ. நியமிக்கப் பட்டுள்ளார்.

இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் ஜனார்த்தன் திவேதி நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், “காங்கிரஸ் துணைத் தலைவரும், மகளிர் காங்கிரஸ் பொறுப்பாளருமான ராகுல் காந்தியின் ஒப்புதலுடன் மகளிர் காங்கிரஸ் அகில இந்தியப் பொதுச்செயலாளராக விஜயதரணி நியமிக்கப் பட்டுள்ளார்” என்று தெரிவித்து உள்ளார்.

கடந்த 2011 சட்டப்பேரவை தேர்தலில் கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு தொகுதியில் வெற்றி பெற் றவர் எஸ்.விஜயதரணி. சட்டப் பேரவையில் காங்கிரஸ் கொறடாவாக செயல்பட்டு வந்த அவர், கடந்த 2015 ஆகஸ்ட் 6-ம் தேதி தமிழக மகளிர் காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்டார்.

கடந்த நவம்பர் 27-ம் தேதி தமிழக காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் கட்சி யின் மாநிலத் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவ னுக்கும், விஜயதரணிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட் டது. இளங்கோவன் தன்னை அநாகரிகமான வார்த்தைகளில் விமர்சித்ததாக அவர் குற்றம்சாட்டினார். அதனைத் தொடர்ந்து மகளிர் காங்கிரஸ் மாநில துணைத் தலைவர் சாந்தானி இளங்கோவன் மீது பெண் கொடுமைச் சட் டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கு மாறு புகார் செய்தார்.

இது தொடர்பாக இரு தரப்பினரும் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோரிடம் புகார் தெரிவித்தனர். இரு தரப்பினரிடமும் விசாரணை நடத்திய காங்கிரஸ் மேலிடம், கடந்த ஜனவரி 22-ம் தேதி மகளிர் காங்கிரஸ் மாநிலத் தலைவர் பதவியிலிருந்து விஜயதரணியை நீக்கியது.

அதனைத் தொடர்ந்து அதிமுக, பாஜகவில் சேர விஜயதரணி முயற்சிப்பதாக செய்திகள் வெளியானது. இதனை மறுத்த அவர், சோனியா, ராகுல் ஆகியோரை சந்தித்து தனது நிலையை விளக்கினார். இந்நிலையில் மகளிர் காங்கிரஸ் அகில இந்திய பொதுச்செயலாளராக விஜயதரணி நியமிக்கப்பட்டு உள்ளார்.

இதுபற்றி ‘தி இந்து’விடம் பேசிய அவர், ‘‘என் மீது நம்பிக்கை கொண்டு மகளிர் காங்கிரஸ் அகில இந்திய பொதுச்செயலாளராக நியமனம் செய்துள்ள சோனியா, ராகு லுக்கு எனது நன்றியை தெரி வித்துக் கொள்கிறேன். அவர் களின் நம்பிக்கையை காப் பாற்றும் வகையில் கட்சியின் வளர்ச்சிக்காக உழைப்பேன்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x