Published : 23 Nov 2021 03:06 AM
Last Updated : 23 Nov 2021 03:06 AM

கல்லூரி, பல்கலைக்கழகங்களில் வாரத்துக்கு 6 நாள் நேரடி வகுப்பு: உயர்கல்வித் துறை அறிவிப்பு

சென்னை

கல்லூரிகள், பல்கலைக்கழகங் களில் வாரத்துக்கு 6 நாட்கள் நேரடி வகுப்புகள் கட்டாயம் நடத்தப்பட வேண்டும் என்று உயர்கல்வித் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழகத்தில் கரோனா பெருந்தொற்று பாதிப்பு குறைய தொடங்கியதை அடுத்து கடந்த செப். 1 முதல் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் சுழற்சி முறையில் இயங்க அனுமதிக்கப்பட்டன. இதற்கிடையே செமஸ்டர் தேர்வுகளை நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடந்து வந்த நிலையில் தேர்வுக்கு போதிய காலஅவகாசம் அளிக்கக்கோரி கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, ஜன. 20-ம் தேதிக்குப் பின்னரே செமஸ்டர் தேர்வுகள் நேரடி தேர்வுகளாக நடத்தப்படும் என்றும் தேர்வுக்கு முன்பாக மாதிரி தேர்வுகள் நடத்த ஏற்பாடு செய்யப்படும் என்றும் உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி அறிவித்தார்.

இந்நிலையில், மாணவர்கள் தேர்வுக்கு தயாராகவும் வகுப் பில் நேரடியாக பாடம் படிக்கவும் வசதியாக வாரத்துக்கு 6 நாட்கள் கல்வி நிறுவனங்கள் செயல்படும் என்று உயர்கல்வித் துறை அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக துறையின் முதன்மைச் செயலர் டி.கார்த்தி கேயன் வெளியிட்ட அரசாணை யில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் உள்ள மாநில பல்கலைக் கழகங்கள், நிகர்நிலை பல்கலைக் கழகங்கள், தன்னாட்சி கல்வி நிறுவனங்கள், சுயநிதி கல்லூரிகள் உள்ளிட்ட உயர்கல்வித் துறையின் கீழ் இயங்கி வரும் அனைத்து கல்வி நிறுவனங்களிலும் சனிக்கிழமை உட்பட வாரத்தில் 6 நாட்கள் நேரடி வகுப்புகள் நடத்தப்பட வேண்டும். அப்போது கரோனா வழிகாட்டு நெறிமுறைகள் கண்டிப் பாக பின்பற்றப்பட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.

மேலும், மேற்கண்ட அரசாணை தொடர்பாக மாநில தொழில்நுட்பக் கல்வி இயக்குநர், கல்லூரி கல்வி இயக்குநர், மாவட்ட ஆட்சியர்கள், பல்கலைக்கழகங்களின் பதிவாளர்கள் ஆகியோருக்கு உயர் கல்வித் துறை முதன்மை செயலர் கார்த்திகேயன் தனியாக கடிதமும் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது:

அனைத்து கல்வி நிறுவனங் களிலும் நடப்பு செமஸ்டர் காலத்தில் வாரத்தில் 6 நாட்கள் (சனிக்கிழமை உட்பட) நேரடி வகுப்புகள் நடத்தப்பட வேண்டும். ஏற்கெனவே நடத்த திட்டமிடப்பட்ட செமஸ்டர் தேர்வுகளை ஜனவரி 20-க்குப் பிறகு நடத்த வேண்டும். அதற்கு முன்பாக மாணவர்களுக்கு மாதிரி தேர்வுகள் நடத்த வேண்டும். அவர்கள் தேர்வுக்கு தயாராகும் வகையில் பாடப்புத்தகங்களை வழங்க வேண்டும்.

இணையவழியில் அனைத்து பாடங்களையும் நடத்தி முடித் துள்ள கல்வி நிறுவனங்கள், மாணவர்கள் பாடங்களை நன்கு புரிந்துகொள்ளும் வகையில் அவர்களுக்கு திருப்புதல் வகுப்பு களை நடத்த வேண்டும். பல்கலைக் கழகங்களின் பதிவாளர்கள் ஏற் கெனவே திட்டமிட்டிருந்த தேர்வுக்கால அட்டவணை மாற்றியமைக் கப்பட்டிருப்பதை உறுதி செய்வதுடன் திருத்தப்பட்ட புதிய தேர்வுக்கால அட்டவணையை உயர்கல்வித்துறைக்கு அனுப்பிவைக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x