

தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தைக்கு 5 பேர் கொண்ட குழுவை அமைத்தது மதிமுக.
இது தொடர்பாக அக்கட்சி தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்: 2014-இல் நடைபெற இருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் போட்டியிட இருக்கிறது.
தேர்தல் கூட்டணிப் பேச்சுவார்த்தைக்காக, டாக்டர் இரா.மாசிலாமணி, கழகப் பொருளாளர்; அ.கணேசமூர்த்தி எம்.பி., ஆட்சிமன்றக் குழுச் செயலாளர்; இமயம் ஜெபராஜ், உயர்நிலைக்குழு உறுப்பினர்; புலவர் சே.செவந்தியப்பன், சிவகங்கை மாவட்டச் செயலாளர் மற்றும் சதன் திருமலை குமார் ஆகியோரைக் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சில தினங்களுக்கு முன்னர் வைகோ, பாஜக தலைவர் ராஜ்நாத் சிங்கை சந்தித்தார். மீண்டும் மத்தியில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வரக்கூடாது என தெரிவித்த வைகோ பாஜக-வுடன் கூட்டணி அமைப்பதற்கான சாத்தியக் கூறுகளை ஆராய்ந்து வருவதாக தெரிவித்திருந்தார் என்பது கவனிக்கத்தக்கது.