விவசாய கடன்கள் ரத்து செய்யப்படாதது ஏமாற்றம் அளிக்கிறது: அன்புமணி ராமதாஸ்

விவசாய கடன்கள் ரத்து செய்யப்படாதது ஏமாற்றம் அளிக்கிறது: அன்புமணி ராமதாஸ்
Updated on
2 min read

மத்திய அரசின் பட்ஜெட்டில் விவசாய கடன்கள் ரத்து செய்யப் படாதது ஏமாற்றம் அளிக்கிறது என தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.

மொரப்பூர்-தருமபுரி இணைப்பு ரயில் பாதை திட்டத்திற்கு ரயில்வே பட்ஜெட்டில் நிதி ஒதுக்கி அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த திட்டத்திற்கு தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் அன்புமணி ராமதாஸ் எடுத்த முயற்சிகள் தான் காரணம் என பாமக தரப்பில் கூறப்படுகிறது.

இதை கொண்டாடும் விதமாக நேற்று தருமபுரி வந்த அன்புமணி ராமதாஸுக்கு பாமக சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப் பட்டது. பின்னர் அவரை தருமபுரி பேருந்து நிலையம், கடைவீதி வழியாக ரயில் நிலையத்திற்கு கட்சியினர் ஊர்வலமாக அழைத்துச் சென்றனர். அங்கு தொண்டர்கள் மத்தியில் பேசியபின் அன்புமணி செய்தியாளர்களிடம் கூறியதாவது:

மொரப்பூர்-தருமபுரி இணைப்பு ரயில் பாதை திட்டத்திற்கு அமைச்சர்கள், அதிகாரிகளை 11 முறை சந்தித்து தொடர் முயற்சிகள் மேற்கொண்டேன். சென்னையில் இருந்து அனுப்பப்பட்ட இந்த திட்டம் லாப நோக்கிலான பார்வையில் ‘மைனஸ் 8’-க்குத் தான் தகுதியுடையது என ஆய்வறிக்கை அனுப்பி விட்டனர். ஆனாலும், தொடர்ந்து போராடி இந்த திட்டம் ‘பிளஸ் 1’ என்ற அளவிற்கு லாபகரமாக இருக்கும் என ஆய்வறிக்கை அனுப்ப வைத்தோம். அதன்பிறகே இந்த திட்டம் நிறைவேறியுள்ளது.

என்னை நாடாளுமன்ற உறுப்பின ராக்கிய தொகுதிக்கு வளர்ச்சிகளை கொண்டுவர வேண்டும் என்று நான் எடுத்து வரும் முயற்சிகளுக்கு இது ஒரு சாட்சி. இந்நிலையில் வரும் தேர்தலில் பாமக ஆட்சி அமைந்து நான் முதல்வரானால் தமிழகம் முழுக்க வளர்ச்சி அடையும் வகையில் பல திட்டங்களை அமலாக்குவோம்.

பல்வேறு மாநில முதல்வர்களும் தங்கள் மாநிலங்களை வளர்க்க பிரதமர், மத்திய அமைச்சர்கள் ஆகியோரை சந்தித்து கோரிக்கை வைக்கின்றனர். இதர மாநிலங்கள், வெளிநாடுகளுக்கும் சென்று புதிய திட்டங்களை தங்கள் மாநிலங் களுக்கு கொண்டு வருகின்றனர். ஆனால், தமிழக முதல்வர் வீட்டை விட்டே வெளியில் வராததால் தமிழகத்தில் வளர்ச்சியே ஏற்பட வில்லை.

மத்திய அரசின் பொது பட்ஜெட்டில் சில வரவேற்கத்தக்க அம்சங்கள் இருந்தபோதும் பல ஏமாற்றங்களை தந்துள்ளது. வேளாண் துறை வளர்ச்சிக்கான நிதி ஒதுக்கீடு பெரிய அளவில் அதி கரிக்கப்படவில்லை. விவசாயிகள் தற்கொலை தொடர்ந்து வரும் நிலையில், விவசாய கடன்கள் தள்ளுபடி செய்யப்படாதது ஏமாற்றம் தருகிறது. தனி நபர் வருமானத்திற்கான வரி செலுத்தும் உச்ச வரம்பு ரூ.5 லட்சமாக உயர்த்தப்படும் என பல கோடி பேர் எதிர்பார்த்தனர். இதை கண்டுகொள்ளாதது பெரும் ஏமாற்றத்தை அளித்திருக்கிறது.

கல்வி, சுகாதாரத்திற்கு கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம். இதுதவிர, புகையிலை பொருட்கள் மீது வெறும் 5 சதவீதம் மட்டுமே வரி உயர்த்தப்பட்டிருப்பது நாட்டு மக்கள் மீது அக்கறையின்மையை காட்டுகிறது. 100 சதவீதம் வரி உயர்ந் தால் தான் புகையிலை பொருட் களால் மனித வளம் சீரழிவது குறையும். இவ்வாறு கூறினார்.

இந்நிகழ்ச்சியின்போது, பாமக தலைவர் ஜி.கே.மணி, மாநில துணைப் பொதுச் செயலாளர் சரவணன், முன்னாள் மாவட்ட ஊராட்சிக் குழு தலைவர் வெங்கடேஸ்வரன், மாநில நிர்வாகிகள் சாந்தமூர்த்தி, அரசாங்கம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in