

பள்ளி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்ட வழக்கில் அங்கு பணியாற்றிய இன்ஸ்பெக்டர் கண்ணதாசனை திருச்சி சரக டிஐஜி சரவணசுந்தர் இன்று (நவ. 21ம் தேதி) பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.
கரூர் அருகேயுள்ள அரசு காலனியைச் சேர்ந்த 17 வயது தனியார் பள்ளி மாணவி கடந்த 19ம் தேதி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். தற்கொலைக்கு முன்பாக பாலியல் தொந்தரவு காரணமாக தற்கொலை செய்துகொள்ளவதாக கடிதம் எழுதி வைத்திருந்தார்.
இதுகுறித்து வெங்கமேடு இன்ஸ்பெக்டர் கண்ணதாசன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார்.
இன்ஸ்பெக்டர் கண்ணதாசன் இவ்வழக்கில் அலட்சியமாக செயல்பட்டதாக திருச்சி சரக டிஐஜி சரவணசுந்தர் இன்ஸ்பெக்டர் கண்ணதாசனை காத்திருப்போர் பட்டியலுக்கு நேற்று மாற்றிய நிலையில் இன்று (நவ. 21ம் தேதி) இன்ஸ்பெக்டர் கண்ணதாசனை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.