

கனமழையால் பல்வேறு இடங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால், தெற்கு ரயில்வேயில்40-க்கும் மேற்பட்ட விரைவு ரயில்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.
பருவமழை தீவிரமடைந்து தமிழகம், ஆந்திராவில் பல்வேறுஇடங்களில் கனமழை பெய்துவெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. சில இடங்களில் தண்டவாளங்கள் நீரில் மூழ்கியுள்ளன. இதனால், தமிழகத்தில் இருந்து பல்வேறு இடங்களுக்கு செல்ல வேண்டிய விரைவு ரயில்கள் கடந்த சில நாட்களாக ரத்து செய்யப்பட்டு வருகின்றன.
அந்த வகையில், ஹவுரா - சென்னை சென்ட்ரல் (12841), ஜோத்பூர் - சென்னை எழும்பூர் (12841),அகமதாபாத் - சென்னை சென்ட்ரல் (20954), சென்னை சென்ட்ரல் - ஹைதராபாத் (12603), சென்னை சென்ட்ரல் - புதுடெல்லி (12615) உட்பட பல்வேறு விரைவு ரயில்களின் நேற்றைய சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.
அதுபோல, மும்பை - நாகர்கோவில் (16351), சென்னை சென்ட்ரல் - ஹவுரா (12842), சென்னை சென்ட்ரல் - விஜயவாடா (12077)சென்னை சென்ட்ரல் - அகமதாபாத் (12656), சென்னை சென்ட்ரல் - நிஜாமுதீன் (12269), சென்னை சென்ட்ரல் - ஹவுரா கோரமண்டல் (12842), சென்னை - விஜயவாடா (12077) உள்ளிட்ட விரைவு ரயில்களின் இன்றைய சேவையும் ரத்து செய்யப்பட்டுள்ளது. நேற்றும்,இன்றும் சேர்த்து மொத்தம் 40-க்கும் மேற்பட்ட ரயில்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.