

பாமகவின் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள அன்புமணி ராமதாஸ் ‘தமிழக வளர்ச்சி பற்றி அன்புமணி’ என்ற தலைப்பில் 7 நாட்கள் 7 நகரங்களில் உரையாற்ற உள்ளார். முதல் நிகழ்ச்சியாக வேலூர் ஊரிசு கல்லூரி காப் அரங்கத்தில் ‘சுகாதாரம் குறித்து அன்புமணி’ என்ற தலைப்பில் இன்று (10-ம் தேதி) உரையாற்றுகிறார். சேலத்தில் நாளை ‘மது ஒழிப்பு குறித்தும், 12-ம் தேதி கோவையில் ‘தொழில் வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்பு குறித்தும் பேசுகிறார். 13-ம் தேதி திருச்சி திருவானைக்காவலில் ‘வேளாண் புரட்சி குறித்தும், 14-ம் தேதி மதுரையில் ‘ஊழல் ஒழிப்பு குறித்தும், 15-ம் தேதி நெல்லையில் ‘தரமான கல்வி குறித்தும் அன்புமணி உரையாற்ற உள்ளார். நிறைவாக 16-ம் தேதி சென்னை அண்ணா அரங்கத்தில் ‘சென்னை பெருநகருக்கான புதிய நகர்ப்புற செயல்திட்டம் என்ற தலைப்பில் பேசுகிறார்.