Published : 10 Mar 2016 08:46 AM
Last Updated : 10 Mar 2016 08:46 AM

போலி வாக்காளர்களை சேர்த்துள்ளதாக திமுக மீது அதிமுக புகார்: ஆதாரத்துடன் தேர்தல் அதிகாரியிடம் மனு

போலி வாக்காளர்களை சேர்த் துள்ளதாக திமுக மீது தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் அதிமுக சார்பில் புகார் மனு அளிக்கப் பட்டுள்ளது.

தமிழகத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் கடந்த ஜனவரி 20-ம் தேதி வெளியிடப்பட்டது. இதில் பல லட்சம் போலி வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக தலை மைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியிடம் திமுக சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டது. கடந்த மாதம் சென்னை வந்த தலைமைத் தேர்தல் ஆணையர் நசிம் ஜைதியிடமும் திமுக புகார் அளித்தது.

இதற்கிடையே, தேர்தல் ஆணைய உத்தரவுப்படி வாக் காளர் பட்டியல் திருத்தப் பணிகள் பிப்ரவரி 15 முதல் 29-ம் தேதி வரை நடந்தது. இதில் 6 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இறப்பு, இரட்டை பதிவு உள்ளிட்டவை நீக்கப்பட்டன.

இந்நிலையில், தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியை அதிமுக வின் தேர்தல் பிரிவு செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன் நேற்று சந்தித்து ஒரு புகார் மனுவை கொடுத்தார். அதில், தாம்பரத் தில் 263 போலி வாக்காளர்களை திமுகவினர் சேர்த்துள்ளதாக பெயர் மற்றும் ஆதாரத்துடன் கூறப்பட்டிருந்தது. இதுதொடர் பாக ஆய்வு செய்யப்படும் என ராஜேஷ் லக்கானி தெரிவித்தார்.

இந்து மக்கள் கட்சி

தலைமை தேர்தல் அதிகாரி யிடம் இந்து மக்கள் கட்சியின் மாநில இளைஞரணி பொதுச் செயலாளர் டி.குருமூர்த்தி, பொதுச்செயலாளர் ராம.ரவிக்குமார் ஆகியோர் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:

அரசியல் கட்சிகளின் தலைவர் கள் இந்துக்களின் மத உணர்வை புண்படுத்தும் வகையில் இந்து தெய்வங்களோடு ஒப்பிட்டு விளம்பரம் செய்கின்றனர். இவற்றை தடுக்கும் வகையில் சிறப்பு கண்காணிப்புக் குழு அமைக்க வேண்டும்.

தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட கட்சியினர், தங்கள் சின்னங்களை தற்போது ஆங்காங்கே விளம்பரம் செய்து வருகின்றனர். சுயேச்சை வேட் பாளர்களுக்கு இதற்கான வாய்ப் பில்லை என்பதால், அனைத்துக் கட்சிகளின் சின்னங்களையும் முடக்கி, சம வாய்ப்பு வழங்க வேண்டும். சுயேச்சை சின்னம் அல்லது மேலை நாடுகளில் உள்ளதுபோல எண் அடிப்படையில் சின்னங்களை ஒதுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x