

தஞ்சாவூர் புன்னைநல்லூர் மாரியம்மன் கோயிலில் நேற்று குடும்பத்துடன் வந்து வழிபாடு செய்த பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட விரும்புகிறவர்களிடம் நேர்காணல் முடிவடைந்தது. திமுக, காங்கிரஸ் கூட்டணி மக்களால் ஏற்கெனவே புறக்கணிக்கப்பட்டது. மக்கள் நலக் கூட்டணியால் ஏதும் சாதிக்க முடியாது. அதிமுக மீது மக்கள் கடும் கோபத்தில் உள்ளனர். இதற்கெல்லாம் ஒரே மாற்று பாஜக என்று மக்கள் கருதுகின்றனர். யார் முதல்வர், யார் பெரியவர் என்று போட்டியிட்டுக் கொண்டு இருப்பதைவிட, உதிரிகளாகப் போட்டியிடாமல் உறுதியாகப் போட்டியிட்டால் அனைவரும் வெற்றி பெறலாம். அதை உணர்ந்து இணைந்து வருவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது. இவ்வாறு தமிழிசை கூறினார்.