

தனது அறிவுத்திறனால் முதல்வர் ஸ்டாலின் சென்னையைப் பொலிவுறச் செய்வார் என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.
சென்னையில் மழை தேங்காமால் இருக்க இனி எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்துப் பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு பதிலளிக்கும்போது, ”அடுத்தடுத்த மழைக் காலங்களில் சென்னையில் மழை தேங்காமல் இருக்க ஒரு வரைவுத் திட்டத்தை ஏற்படுத்த நிச்சயம் மாநகராட்சி நடவடிக்கை எடுக்கும்.
இந்த மழைக் காலங்களில் என்னனென்ன நடவடிக்கைகள் தேவை என்பது சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. நீர் தேங்கும் அனைத்துப் பகுதிகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. சென்னையில் உள்ள அனைத்துக் குறைகளும் களையப்பட வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். நிதிச்சுமை இருந்தாலும் தனது அறிவுத் திறனால் முதல்வர் ஸ்டாலின் சென்னையைப் பொலிவுறச் செய்வார்” என்று தெரிவித்துள்ளார்.
இந்தச் செய்தியாளர் சந்திப்பில் அமைச்சர் சேகர் பாபுவுடன் சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சீங் பேடியும் இருந்தார்.