கோயில் நிலங்களை பாதுகாத்து மீட்க அறநிலையத் துறையில் வட்டாட்சியர் உட்பட 108 பணியிடங்கள் புதிதாக உருவாக்கம்: நிதியும் ஒதுக்கி அரசாணை வெளியீடு

கோயில் நிலங்களை பாதுகாத்து மீட்க அறநிலையத் துறையில் வட்டாட்சியர் உட்பட 108 பணியிடங்கள் புதிதாக உருவாக்கம்: நிதியும் ஒதுக்கி அரசாணை வெளியீடு
Updated on
1 min read

கோயில்களுக்குச் சொந்தமான நிலங்களை பாதுகாத்து மீட்பதற்கு இந்து சமய அறநிலையத் துறையில் வட்டாட்சியர் உட்பட 108பணியிடங்களை தோற்றுவித்துஅரசாணை வெளியிடப்பட்டுள் ளது.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது:

சட்டப்பேரவையில் 2021-22பட்ஜெட் கூட்டத்தொடரில் இந்து சமய அறநிலையத் துறை மானியக்கோரிக்கையின்போது, கோயில்களுக்கு சொந்தமான நிலங்களை விழிப்புடன் பாதுகாத்து மீட்பதற்கு 38 மாவட்டங்களில் உள்ள உதவி ஆணையர் அலுவலகங்களில் வட்டாட்சியர் உட்பட 108 பணியிடங்கள் உருவாக்கப்படும். இதற்கான செலவு ரூ.8.18 கோடி என்று அறநிலையத் துறை அமைச்சர் அறிவிப்பு வெளியிட்டார்.

அதை செயல்படுத்தும் வகையில், அறநிலையத் துறையின் மாவட்ட அளவிலான 36 உதவி ஆணையர் அலுவலகங்களிலும் தலா ஒரு வட்டாட்சியர், தட்டச்சர்,அலுவலக உதவியாளர் பணியிடம்என மொத்தம் 108 புதிய பணியிடங்களை தோற்றுவிக்கலாம். அதில் 36 வட்டாட்சியர் பணியிடங்களை வருவாய் துறை மூலம் அந்தந்த மாவட்ட அலகில் இருந்து மாற்றுப் பணி அடிப்படையில் நிரப்பலாம் என்று அரசு முடிவு செய்து அவ்வாறே ஆணையிடப்படுகிறது.

108 புதிய பணியிடங்களுக்கும் நடப்பு நிதி ஆண்டுக்கு தொடரும் செலவினம், தொடரா செலவினம், கணினி, பிரின்டர் வாங்க என மொத்தம் ரூ.3.86 கோடி நிதி ஒப்பளிப்பு வழங்கியும், 2022-23 நிதி ஆண்டு முதல் தொடரும் செலவினமாக ரூ.8.19 கோடி நிதி ஒதுக்கீடு செய்ய நிர்வாக அனுமதி வழங்கியும் அரசு ஆணையிடுகிறது.

அறநிலையத் துறையில் தோற்றுவிக்கப்படும் வட்டாட்சியர் பணியிடங்களுக்கு பணி விதிகள் ஏற்படுத்தப்பட வேண்டும். தமிழ்நாடு வருவாய் சார்நிலை பணிவிதிகளில் அமைந்துள்ள வட்டாட்சியர்களை கொண்டு அந்த பணியிடங்களை நிரப்பும் வகையில் பணி விதிகளில் திருத்தம் மேற்கொள்ள ஏதுவாக உரிய செயற்குறிப்பு அனுப்புமாறு அறநிலையத்துறை ஆணையருக்கு அறிவுறுத்தப்படு கிறது. இவ்வாறு அரசாணையில் கூறப்பட்டுள்ளது.

அறநிலையத் துறையின் மாவட்ட அளவிலான 36 உதவி ஆணையர் அலுவலகங்களிலும் தலா ஒரு வட்டாட்சியர், தட்டச்சர்,அலுவலக உதவியாளர் பணியிடம் என மொத்தம் 108 புதிய பணியிடங்களை தோற்றுவிக்கலாம்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in