

சட்டப்பேரவை தேர்தலை யொட்டி பெரியார் சிலைகளை மறைக்கும் நோக்கம் இல்லை என்று உயர் நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது.
இதுகுறித்து திராவிடர் விடுதலைக் கழக அமைப்புச் செயலாளர் ரத்தினசாமி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு மீது உயர் நீதிமன்ற நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், எஸ்.விமலா ஆகியோர் கொண்ட அமர்வு பிறப்பித்த உத்தரவு: தேர்தல் ஆணை யம் சார்பில் ஆஜரான வழக் கறிஞர் வாதத்தின் அடிப்படை யில் தேர்தலையொட்டி பெரியார் சிலை மறைத்து வைக்கப்படமாட்டாது என்று அர்த்தமாகிறது என்று கூறினர்.