

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு பொறுப்பு தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள முனீஸ்வர் நாத் பண்டாரி நாளை மறுதினம் (நவ. 22) பதவியேற்க உள்ளார்.
சென்னை உயர் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாக பதவி வகித்த சஞ்ஜிப் பானர்ஜி மேகாலயா உயர் நீதிமன்றத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். அதையடுத்து தற்போது சென்னை உயர் நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதியாக மூத்த நீதிபதி எம்.துரைசாமி பதவி வகித்து வருகிறார்.
இந்நிலையில் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் இரண்டாவது மூத்த நீதிபதியாக பணியாற்றிய முனீஸ்வர்நாத் பண்டாரியை சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக நியமித்து குடியரசுத் தலைவர் உத்தரவிட்டுள்ளார்.
இதைத்தொடர்ந்து அவர் நாளை மறுதினம் (நவ.22) காலைஆளுநர் மாளிகையில் பொறுப்பு தலைமை நீதிபதியாக பதவி ஏற்கிறார். அவருக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார்.