

ஆப்பிரிக்கா கண்டத்தின் செஷல்ஸ் தீவைச் சேர்ந்தவர் ரிச்பேர்ட் டிரன்ட் (53). கடந்த 4 ஆண்டுகளாக வாய் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட இவர் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகியிருந்தார். இந்நிலையில் சென்னை தேனாம்பேட்டை கவிஞர் பாரதிதாசன் சாலையில் உள்ள பாலாஜி பல் மற்றும் முகச்சீரமைப்பு மருத்துவமனையில் சிகிச்சைக்காக ரிச்பேர்ட் டிரன்ட் அனுமதிக்கப்பட்டார்.
மருத்துவமனை இயக்குநரும், முகச்சீரமைப்பு அறுவை சிகிச்சை நிபுணருமான டாக்டர் எஸ்.எம். பாலாஜி தலைமையிலான குழு வினர் அறுவை சிகிச்சை செய்து புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த கீழ் தாடை, பாதி நாக்கு, வாயின் அடிப்பகுதியை முற்றிலுமாக அகற் றினர். அதன்பின் முப்பரிமாண மற் றும் பெட் ஸ்கேன் மூலம் கீழ் தாடை யில் எலும்பு மற்றும் தசை பற்றாக் குறை இருப்பதை குழுவினர் கண்டறிந்தனர். இதையடுத்து மார்பு பகுதியில் இருந்து தசை மற்றும் தொடை பகுதியிலிருந்து தோலை எடுத்து வாய்க்குள் வைத்து பற்றாக் குறையை சரிசெய்தனர்.
இதனைத் தொடர்ந்து அதிநவீன முறையை பயன்படுத்தி கீழ் தாடை யில் அவருடைய எலும்பைக் கொண்டே புதிய தாடை எலும்பை உருவாக்கினர். புதிதாக உருவாக் கப்பட்ட தாடை எலும்பில் இம் பிளான்ட் சிகிச்சை மூலம் பற்களை பொருத்தினர்.
இதுதொடர்பாக பாலாஜி பல் மற்றும் முகச்சீரமைப்பு மருத்துவ மனை இயக்குநரும், முகச்சீர மைப்பு அறுவை சிகிச்சை நிபுணரு மான டாக்டர் எஸ்.எம்.பாலாஜி செய்தியாளர்களிடம் நேற்று அளித்த பேட்டி: வாய் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவரின் தாடை முற் றிலும் நீக்கப்பட்டு, புதிதாக தாடை எலும்பை வளரச் செய்து இம் பிளான்ட் சிகிச்சை மூலம் பற்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த சிகிச்சை இந்தியாவில் முதல்முறை யாக 100 சதவீதம் வெற்றி அடைந் துள்ளது. முழுவதுமாக தாடை எலும்பு வளர 3 மாதங்கள் ஆனது. அதன்பின் செயற்கை பற்கள் பொருத்தப்பட்டன. அவரது உடல் நிலை முழுவதுமாக குணமடைந்து விட்டது. பொருத்தப்பட்ட பற்களும் வலுவாக இருக்கும். பாதி நாக்கு அகற்றப்பட்டுள்ளதால், அவரால் சரியாக பேச முடியாது. ஆனால் அவர் பேசுவதை புரிந்துகொள்ள முடியும். இந்தியாவில் வாய் புற்றுநோய் அதிகரித்து வருகிறது. ஆரம்பத்திலேயே கண்டுபிடித்தால் வாய் புற்றுநோயை முழுவதுமாக குணப்படுத்திவிட முடியும்.