தமிழகம் முழுவதும் 12 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்

தமிழகம் முழுவதும் 12 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்
Updated on
1 min read

லஞ்ச ஒழிப்பு துறை ஐ.ஜி., கோவைமாநகர காவல் ஆணையர் உட்பட12 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

லஞ்ச ஒழிப்பு துறை இயக்குநர் வித்யா குல்கர்னி அயல் பணியாக சிபிஐக்கு சென்றதால், கோவை காவல் ஆணையராக பதவி வகிக்கும் தீபக் எம்.தாமோர் இடமாற்றம் செய்யப்பட்டு லஞ்ச ஒழிப்பு துறை ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்டுள்ளார்.

சென்னை போக்குவரத்து காவல் கூடுதல் ஆணையர் சதீஷ்குமார், கோவை காவல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

பணியமைப்பு பிரிவு டிஐஜிபிரபாகரன், சென்னை சட்டம்ஒழுங்கு (கிழக்கு) இணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். அந்த பொறுப்பில் இருந்த ராஜேந்திரன்,சென்னை போக்குவரத்து காவல் (தெற்கு) இணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். அப்பொறுப்பில் இருந்த செந்தில்குமார், சென்னை பணியமைப்பு பிரிவு டிஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

திருச்சி மாவட்ட எஸ்.பி.யானபா.மூர்த்தி, சென்னை சிபிசிஐடி சிறப்பு புலனாய்வு பிரிவு எஸ்.பி.யாக நியமிக்கப்பட்டுள்ளார்.

போதைப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு குற்றப் புலனாய்வுத் துறை எஸ்.பி. சுஜித்குமார், திருச்சிமாவட்ட எஸ்.பி.யாக நியமிக்கப்பட்டுள்ளார்.

சென்னை புளியந்தோப்பு துணை ஆணையர் ராஜேஷ் கண்ணன், வேலூர் மாவட்ட எஸ்.பி.யாக நியமிக்கப்பட்டுள்ளார். அந்த பொறுப்பில் இருந்த செல்வகுமார், சென்னை நிர்வாகப் பிரிவு ஏஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார். அப்பொறுப்பில் இருந்த பி.சரவணன், நெல்லை மாவட்ட எஸ்.பி.யாகநியமிக்கப்பட்டுள்ளார். அந்தபொறுப்பில் இருந்த மணிவண்ணன், சென்னை புளியந்தோப்பு துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அயல் பணியில் இருந்து தமிழகம் திரும்பிய எஸ்.பி. ரம்யா பாரதி சென்னை சைபர் கிரைம் எஸ்.பி.யாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இது ஐ.ஜி. பதவியில் இருந்துஎஸ்.பி. பதவியாக தரவிறக்கம்செய்யப்பட்டுள்ளது. செயலாக்கம் மற்றும் லஞ்ச ஒழிப்பு துறை பணிகளையும் இவர் கூடுதலாக கவனிப்பார்.

இவ்வாறு தமிழக உள்துறை செயலர் எஸ்.கே.பிரபாகர் நேற்றுபிறப்பித்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in