‘ஆலிவ் ரிட்லி’ ஆமை குஞ்சுகள் வனத்துறையால் கடலில் விடப்பட்டன

‘ஆலிவ் ரிட்லி’ ஆமை குஞ்சுகள் வனத்துறையால் கடலில் விடப்பட்டன
Updated on
1 min read

இந்தியாவில் காணப்படும் கடல் ஆமை இனங்களில் அபூர்வ மானது ‘ஆலிவ் ரிட்லி’ வகை ஆமை கள். உலகிலேயே அதிகமாக காணப்படும் ஆமை இனமும் இதுதான். இந்த வகை ஆமை இனங்கள் இந்திய ஆழ்கடல் பகுதிகளில் வசிக்கக் கூடியவை. இந்த ஆலிவ் ரிட்லி ஆமைகள், புதுச்சேரி, கடலூர், மரக்காணம் உள்ளிட்ட கடலோர பகுதிக்கு ஆண்டுதோறும் நவம்பர் முதல் மார்ச் மாதம் வரையிலான காலங் களில் முட்டையிட வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளன.

குறிப்பாக, மணற்பரப்பு அதிகமுள்ள புதுச்சேரி அடுத்துள்ள புதுக்குப்பம், நல்லவாடு, நரம்பை உள்ளிட்ட கடலோரப் பகுதிகளில் இந்த ஆமைகள் அதிகளவு முட்டையிட்டு செல்வது வழக்கம். ஆலிவ் ரிட்லி அமைகள் அழிந்து வரும் நிலையில் அவற்றை பாதுகாக்க வனத்துறை பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. முட்டைகளை, வனம் மற்றும் வனவிலங்கு பாதுகாப்புத் துறையினர், உள்ளூர் இளைஞர்களின் துணையுடன் சேகரித்து வைத்து பாதுகாத்து, குஞ்சு பொரித்ததும் பத்திரமாக மீண்டும் கடலில் விட்டு வருகின்றனர்.

இதுபோல, இந்த ஆண்டும் புதுச்சேரி வனத்துறை அதிகாரி தியாகராஜன், செயல்விளக்க உதவியாளர் முருகன், உதவியா ளர் வாழ்முனி ஆகியோர் கொண்ட குழுவினர் நேற்று உள்ளூர் இளை ஞர்கள் உதவியுடன் நரம்பை, புதுக்குப்பம் போன்ற கடற்கரை பகுதிகளில் 888 ஆமை முட்டை களை சேகரித்து நரம்பை கடற்கரை யில் மண்ணில் புதைத்து பாது காத்து வந்தனர். தற்போது, இந்த முட்டைகள் பொரிந்து 118 ஆமை குஞ்சுகள் வெளியே வந்தன.

இந்த ஆமை குஞ்சுகளை கடலில் விடும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. துணை வனப் பாதுகாவலர் சத்திய மூர்த்தி தலைமையில் பணிகள் தொடங்கின. கடற்கரையில் விடப்பட்ட ஆமை குஞ்சுகள் மெதுவாக கடலை நோக்கி பயணிக்கத் தொடங்கின. முதலில், கடல் அலை வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல் கரைக்கு அடித்துவரப்பட்டாலும், எதிர் நீச்சல் போட்டு கடலுக்குள் சென்று மறைந்தன.

நிகழ்ச்சியின் போது வனத்துறை ஊழியர்கள், நரம்பை கிராம பொதுமக்கள் இருந்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in