8-ம் வகுப்பு தனித் தேர்வு: சிறப்பு அனுமதி திட்டத்தில் விண்ணப்பிக்கலாம் - அரசு தேர்வுத்துறை அறிவிப்பு

8-ம் வகுப்பு தனித் தேர்வு: சிறப்பு அனுமதி திட்டத்தில் விண்ணப்பிக்கலாம் - அரசு தேர்வுத்துறை அறிவிப்பு
Updated on
1 min read

ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ள தனித் தேர்வர்களுக்கான 8-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு மார்ச் 11, 12-ம் தேதி ஆகிய 2 நாட்கள் விண்ணப்பிக்கலாம் என்று அரசு தேர்வுத்துறை அறிவித் துள்ளது.

இதுதொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்குநர் தண்.வசுந்தராதேவி நேற்று வெளி யிட்ட செய்திக்குறிப்பில் கூறி யிருப்பதாவது:

வரும் ஏப்ரல் மாதம் நடை பெறவுள்ள தனித் தேர்வர்களுக் கான 8-ம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு 1.4.2016 அன்று பன்னிரண்டரை வயது பூர்த்தி அடைந்த தனித்தேர்வர்கள் மார்ச் 11, 12-ம் தேதிகளில் தேர்வுத்துறையின் இணையதளத்தில் (www.tndge.in) குறிப்பிடப்பட்டுள்ள சேவை மையத்துக்குச் சென்று பதிவுசெய்து கொள்ளலாம். தேர்வுக் கட்டணம் ரூ.125. சிறப்பு கட்டணம் ரூ.500. ஆன்லைன் பதிவு கட்டணம் ரூ.50. இக்கட்டணங்களை சேவை மையத்திலேயே நேரடியாக செலுத்தலாம்.

ஆன்லைன் விண்ணப்பத்துடன் தங்களது பள்ளி மாற்றுச் சான்றிதழ் நகல், பதிவுத்தாள் நகல், பிறப்புச் சான்றிதழ் நகல் - இவற்றில் ஏதேனும் ஒன்று மற்றும் ரூ.40 மதிப்புள்ள அஞ்சல்தலை ஒட்டப்பட்ட, சுயமுகவரியிட்ட தபால் உறை ஒன்று ஆகியவற்றையும் இணைக்க வேண்டும். ஆன்லைன் மூலம் பெறப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும்.

இணையதளத்தில்..

தபால் மூலம் பெறப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக் கப்படும். தேர்வுக்கான விரிவான தகவல்களை தேர்வுத்துறையின் இணையதளத்தில் காணலாம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in