

புதுச்சேரி வில்லியனூரில் பழமைவாய்ந்த, புகழ்பெற்ற திருக்காமீஸ் வரர் கோயில் உள்ளது. இரண்டு ஏக்கர் பரப்பளவைக் கொண்டுள்ள இக்கோயில் சோழர் கால கட்டி டக் கலையை உடையது. அனைத்துகோபுரங்களும் சிறப்பாக வடி வமைக்கப்பட்டுள்ள இக்கோயிலில் ஏராளமான சன்னதிகள் உள்ளன.
தொடர் கனமழையால், இக் கோயினுள் மழை வெள்ளம் புகுந்துள்ளது. கோயிலின் உட்புறம் வளாகம், பக்தர்கள் நிற்குமிடம், அம்மன் சன்னதி, திருக்கா மீஸ்வரர் சன்னிதி என அனைத்து இடங்களிலும் மழைநீர் தேங்கி நிற்கிறது.
கனமழையின் தொடக்கத்தில் கோயில் வளாகத்தில் தேங்கும்மழை நீரை கோயில் குளத்திற் குள் அனுப்ப முயற்சி மேற் கொள்ளப்பட்டது. இதைத் தொடர்ந்து மழை நீர் வீணாகாமல் குளத்தின் வழியே நிலத்தடிக்குள் சென்றது. ஆனாலும், அடுத்தடுத்து பெய்து வரும் கனமழையால் குளம் நிரம்பி அதன் நீர் கோயிலை சூழ்ந்து நிற்கிறது. 2005-ம் ஆண்டிற்குப் பிறகு திருக்காமீஸ்வரர் கோயிலுக்குள் மழை நீர் தேங்கியுள்ளது. கோயிலுக்குள் தேங்கியுள்ள மழைநீரை அகற்ற பொதுப்பணித் துறைக்கு முதல்வர் ரங்கசாமி உத்தரவிட்டுள்ளார்.
இதேபோல் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திருவக்கரை வக்கிரகாளி அம்மன் கோயிலில் மழை நீர் புகுந்தது.