

தூத்துக்குடி மாவட்டம் பழையகாயல் பகுதியைச் சேர்ந்தவர் சுபாஷ் பண்ணை யார். அகில இந்திய நாடார் பாதுகாப்பு பேரவையின் தலைவராகவும் உள்ளார். இவரது தோட்டத்தில் மார்ச் 8-ம் தேதி தேங்காய் பறிக்கும் பணி நடைபெற்றுள் ளது. அங்கு சுபாஷ் பண்ணையார் மற்றும் அவரது ஆதரவாளர்கள் இருந்துள்ளனர்.
அப்போது, தோட்டத்துக்குள் புகுந்த சிலர் வெடிகுண்டுகளை வீசி அங்கிருந்த வர்களை அரிவாளால் வெட்டியுள்ளனர். இதில், சுபாஷின் ஆதரவாளர்கள் ஆறு முகசாமி, கண்ணன் ஆகியோர் கொல் லப்பட்டனர்.
இந்த சம்பவம் தொடர்பாக திருநெல் வேலி மாவட்டம் தச்சநல்லூரைச் சேர்ந்த முருகபாண்டி மகன் கண்ணன் என்ற கண்ணபிரான்(36), மேலக்கரையைச் சேர்ந்த கலையரசன் மகன் மணி என்ற மணிகண்டன்(28), தூத்துக்குடி மாவட்டம் மரப்பநாடு அருகேயுள்ள படுகையூரைச் சேர்ந்த சுப்பிரமணியன் மகன் முருகன்(24) ஆகிய 3 பேர் புதுக்கோட்டை குற்றவியல் நீதிமன்றத் தில் நேற்று சரணடைந்தனர். 3 பேரையும் 15 நாட்கள் சிறையில் அடைக்க நீதிபதி பாரதிராஜன் உத்தரவிட்டார்.