

திருச்சி மாவட்டத்தில் 8 தொகுதிகளுக்கு இந்து மக்கள் கட்சி வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
கட்சியின் இளைஞரணி மாநிலப் பொதுச் செயலாளர் குருமூர்த்தி, திருச்சியில் செய்தியாளர்களிடம் நேற்று கூறியது: பாஜக உட்பட எந்தக் கட்சியும் இந்துக்களுக்கு ஆதரவாக செயல்படவில்லை. எனவே, இந்துக்களை ஒருங்கிணைக்கும் வகையில், சட்டப்பேரவைத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுகிறோம். திருச்சி மாவட்டத்தில் திருச்சி கிழக்கு தொகுதிக்கு னிவாசன் (எ) சந்துரு, திருச்சி மேற்கு தொகுதிக்கு பாஸ்கர், ரங்கத்துக்கு சண்முகம், லால்குடிக்கு சங்கர் தர்மராஜ், திருவெறும்பூருக்கு செல்வகுமார், முசிறிக்கு பிரசன்ன வெங்கடேசன், மண்ணச்சநல்லூருக்கு பாலமுரளி, மணப்பாறைக்கு வீரசிவமணி (எ) ராஜா ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். துறையூர் (தனி) தொகுதிக்கான வேட்பாளர் பின்னர் அறிவிக்கப்படுவார் என்றார்.