Published : 18 Mar 2016 09:02 AM
Last Updated : 18 Mar 2016 09:02 AM

தலித் இளைஞர்கள் மரணத்தில் மத சாயம்: யுவராஜ் அறிக்கை

பொறியியல் பட்டதாரி கோகுல்ராஜ் கொலை வழக்கு தொடர்பாக, நாமக்கல் நீதிமன்றத்தில் நேற்று தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை நிறுவனர் யுவராஜ் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அவரே எழுதி கையெழுத்திட்ட 8 பக்க அறிக்கை செய்தியாளர்களிடம் அளிக்கப்பட்டது. அந்த அறிக்கை விவரம்:

ஒரு பட்டியலினத்தவர், பட்டியலி னம் இல்லாத ஏதோ ஒரு சமூகத் தில் திருமணம் செய்துள்ள நிலையி லோ, காதலிக்கும் நிலையிலோ, சந்தேக மரணமோ, கொலையோ நடந்துவிட்டால் அதற்கு சாதி ஆண வக் கொலை என பெயர் சூட்டுவது ஏன்? இவ்வாறு பேசுபவர்கள், அவர்களுக்கு ஆதரவு தருபவர்கள் என அனைவரும் கூறும் ஒரே காரணம், அவன் பட்டியலினத்தை சேர்ந்த சமூகம்.

இப்படிப்பட்ட காரணங்களுக் காக ஒரு மரணம் நிகழ்த்தப்படுமா னால் அதற்கு சமூகம் காரணம் இல் லை. பெண்ணை கவர்ந்து செல் பவன் பெண் வீட்டாரை நடைபிண மாக்குகிறான். அதன் வெளிப்பாடு தான் இத்தகைய மரணங்கள். இத னை இனியும் வேடிக்கை பார்க்கா மல் காவல் துறை அடக்க வேண்டும்’ என அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x