

அதிமுகவில் 7-வது நாளாக நேற்று நடந்த நேர்காணலில் தேனி, திண்டுக்கல், புதுக்கோட்டை மாவட்டங்களில் விடு பட்டவர்கள் பங்கேற்றனர். பிற்பக லில் நடக்கவிருந்த டெல்டா மாவட்டங் களுக்கான நேர்காணல் திடீரென ரத்தானதால் அதிமுகவினர் ஏமாற்றத் துடன் திரும்பிச் சென்றனர்.
தமிழக சட்டப்பேரவை தேர்த லில் அதிமுக சார்பில் போட்டயிட விருப்ப மனு கொடுத்தவர்களில் குறிப்பிட்டவர்களை தேர்வு செய்து, அவர்களிடம் கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா நேர்காணல் நடத்தி வருகிறார்.
முதல்கட்ட நேர்காணலில் சென்னை, காஞ்சிபுரம் மாவட்டங் களைச் சேர்ந்த 5 பேர் பங்கேற்றனர். தொடர்ந்து 2-ம் கட்ட நேர்காணல், கடந்த வாரம் தொடங்கியது. நேற்று 7-வது நாளாக நேர்காணல் தொடர்ந்தது. இதில் தேனி மாவட்டம் பெரியகுளம், திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர், திண்டுக்கல், நிலக்கோட்டை, புதுக் கோட்டை மாவட்டம் புதுக்கோட்டை, கந்தவர்வகோட்டை, ஆலங்குடி ஆகிய தொகுதிகளைச் சேர்ந்தவர்கள் பங்கேற் றனர். நேர்காணலில் பங்கேற்றவர்களி டம் தொகுதி நிலவரம், குடும்ப சூழல், கல்வித்தகுதி உள்ளிட்ட விவரங்களை ஜெயலலிதா கேட்டறிந்தார்.
பிற்பகலில் தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் நேர்காணலுக்காக காத்திருந்தனர். குறிப் பாக திருவாரூர், மன்னார்குடி, திருத் துறைப்பூண்டி தொகுதிகளுக்காக விருப்ப மனு அளித்தவர்கள் வந்திருந்த னர். ஆனால், பிற்பகலில் நேர்காணல் ரத்து செய்யப்பட்டது. அவர்களுக்கு இன்று (28-ம் தேதி) நேர்காணல் நடக் கும் என கூறப்பட்டது. இதனால் அவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
கடந்த 7 நாட்களில் 10 மாவட் டங்களுக்கான நேர்காணல் முடிந் துள்ளது. இதிலும், சில தொகுதிகளுக்கு நேர்காணல் நடக்கவில்லை. எனவே, அந்த தொகுதிகளைச் சேர்ந்தவர்கள், தங்களுக்கு அழைப்பு வரும் என்ற எதிர்பார்ப்புடன் சென்னையில் தங்கி யுள்ளனர். இன்னும் சில தினங்களுக்கு நேர்காணல் தொடரும் என்று அதிமுக வட்டாரங்கள் தெரிவித்தன.