

நடிகர் சங்கப் பணத்தில் மோசடி செய்திருப்பதாக முன்னாள் நிர்வாகிகள் சரத்குமார் உட்பட 3 பேர் மீது சென்னை பெருநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவராக நடிகர் சரத்குமார் கடந்த 9 ஆண்டுகளாக பதவி வகித்தார். பொதுச்செயலாளராக ராதாரவியும், பொருளாளராக வாகை சந்திரசேக ரும் பதவியில் இருந்தனர். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நடந்த நடிகர் சங்க தேர்தலில் சரத்குமார் அணி தோல்வி அடைந்தது. நடிகர் சங்கத் தலைவராக நாசரும், பொதுச் செயலாளராக நடிகர் விஷால், பொருளாளராக நடிகர் கார்த்தி ஆகியோரும் தேர்ந்தெடுக்கப்பட்ட னர். தென்னிந்திய நடிகர் சங்கத்தின் நிர்வாகிகளே, தென்னிந்திய நடிகர் சங்க அறக்கட்டளையின் அறங் காவலர்களாகவும் செயல்படுவார் கள். நடிகர் சங்கத்தின் சொத்துக் கள் அனைத்தையும் இந்த அறக்கட் டளை நிர்வாகம் செய்வது வழக்கம்.
இந்நிலையில் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுக்குழு உறுப் பினர் பூச்சி முருகன், அவரது வழக் கறிஞர் கிருஷ்ணா ஆகியோர் சென்னை பெருநகர காவல் ஆணை யர் அலுவலகத்துக்கு நேற்று காலை யில் வந்து ஒரு புகார் மனுவைக் கொடுத்தனர். அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:
நடிகர் சங்க அறக்கட்டளையின் சொத்துக்கள் சிறப்பு ஆடிட்டர் மூலம் சரிபார்க்கப்பட்டன. அதில் கோடிக்கணக்கில் மோசடி நடந் திருப்பது தெரியவந்துள்ளது. இது குறித்து முன்னாள் நிர்வாகிகளான சரத்குமார் மற்றும் 2 பேரிடம் விளக் கம் கேட்கப்பட்டது. அவர்களின் பதில் திருப்தி அளிக்கும் விதத்தில் இல்லை. எனவே மோசடி செய் தவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப் பட்டிருந்தது.
இந்த புகார் மனுவில் நடிகர் சங்க அறக்கட்டளையின் அறங்காவல ராக உள்ள நடிகர் விஷால் கையெழுத்திட்டுள்ளார். சிறப்பு ஆடிட்டரின் அறிக்கையை அடிப் படையாகக் கொண்டு புகார் கொடுக்கப்பட்டுள்ளதாக விஷால் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சரத்குமார் புகார்
இந்த புகார் மனுவைத் தொடர்ந்து நேற்று மாலையில் நடிகர் சரத்குமார் சென்னை பெருநகர காவல் ஆணையர் அலுவலகத்துக்கு வந்து ஒரு புகார் மனுவைக் கொடுத்தார். அதில், “புதிய நிர்வாகிகள் கேட்ட அனைத்து வரவு-செலவு கணக்குகளையும் சங்க ஆடிட்டரிடம் சமர்ப்பித்துள்ளேன். சங்கத்தில் இருந்து அனுப்பப்பட்ட அனைத்து கடிதங்களுக்கும் விளக்க கடிதமும் அனுப்பியிருக்கிறேன். எனக்கும், எனது கட்சிக்கும் களங்கம் ஏற்படுத்தும் விதமாக என் மீதும், நடிகர் சங்கத்தில் ஏற்கெனவே இருந்த 2 அறங்காவலர்கள் மீதும் பூச்சி முருகன் ஊழல் புகார் கொடுத்துள்ளார். அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது.