வைகோவுக்கு திமுக நோட்டீஸ்

வைகோவுக்கு திமுக நோட்டீஸ்
Updated on
1 min read

தேமுதிகவுடன் திமுக பேரம் பேசியதாக வைகோ கூறிய குற்றச்சாட்டுக்கு எதிராக திமுக சட்டப்படி விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

மதுரையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த மக்கள் நலக் கூட்டணி ஒருங்கிணைப்பாளர் வைகோ, "தேமுதிகவிடம், திமுக பேரம் பேசியது உண்மை. இது தொடர்பாக ஒரு நாளிதழில் வந்த செய்தி உண்மையாகும். ஆனால், அதனை உதாசீனப்படுத்து தூக்கி எறிந்துவிட்டு எங்களோடு கூட்டணி அமைந்திருக்கிறார் விஜயகாந்த்'' என்று வைகோ கூறினார்.

இது தொடர்பாக திமுக பொருளாளர் ஸ்டாலின் கூறுகையில், ''வைகோவின் குற்றச்சாட்டு அபாண்டமானது. அதற்கு சட்டப்படி விளக்கம் அளிக்க வேண்டும்'' என்றார்.

இந்நிலையில் திமுக தலைவர் கருணாநிதி வழக்கறிஞர் மூலம் வைகோவுக்கு நோட்டீஸ் அனுப்பினார். அதில், திமுக மீது வைகோ அவதூறான கருத்துகளை பரப்புவதாகவும், அதற்கு சட்டப்படி விளக்கம் அளிக்கவேண்டும் என்றும், திமுக மீது வைகோ கூறிய குற்றச்சாட்டை ஏழு நாட்களுக்குள் திரும்பப் பெற வேண்டும் என்றும் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

இது குறித்து வைகோ கூறுகையில், ''திமுக நோட்டீஸ் அனுப்பியதை சட்டரீதியாக எதிர்கொள்வேன். நான் கூறிய கருத்தை திரும்பப் பெறப்போவதில்லை. தேமுதிக பேரம் பேசவில்லை. திமுகதான் பேரம் பேசியதாக நாளிதழில் வெளியானது'' என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in