Published : 16 Nov 2021 01:50 PM
Last Updated : 16 Nov 2021 01:50 PM

வேளாண் துறை சார்பில் ரூ.184 கோடி மதிப்பீட்டில் கட்டிடங்கள்: முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்

வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் ரூ.183.73 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்களைத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

இதுகுறித்துத் தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

''தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (16.11.2021) தலைமைச் செயலகத்தில், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் 147 கோடியே 78 லட்சத்து 44 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள சேமிப்புக் கிடங்குகள், ஏலக்கூடங்கள், சுத்தப்படுத்தித் தரம் பிரிக்கும் கூடங்கள், விவசாயிகளுக்கான ஓய்வு அறைகள் மற்றும் விற்பனை அலுவலகங்கள், 22 கோடியே 60 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையங்கள், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் ஆராய்ச்சி நிலையங்களில் 12 கோடியே 35 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கல்விக் கட்டிடங்கள் மற்றும் 1 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள வேளாண்மைப் பொறியியல் விரிவாக்க மையம் ஆகியவற்றைத் திறந்து வைத்தார்.

வேளாண்மைத் துறைக்கு அதிக முக்கியத்துவம் அளித்திடும் வகையில் தமிழக வரலாற்றில் முதல் முறையாக, விவசாயப் பெருமக்களை அழைத்து, அவர்களது கருத்துகளைக் கேட்டறிந்து வேளாண்மைத் துறைக்கென தனி நிதிநிலை அறிக்கை கடந்த 14.8.2021 அன்று தாக்கல் செய்யப்பட்டு, உழவர்களின் நலனைப் பேணும் வகையில் வேளாண்மைத் துறை என்ற பெயரை வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை எனப் பெயர் மாற்றமும் செய்யப்பட்டது. தமிழ்நாட்டில் கூடுதலாக 11.75 லட்சம் ஹெக்டேர் பயிரிடச் செய்து, தற்போதுள்ள நிகர சாகுபடிப் பரப்பான 60 விழுக்காடு என்பதை 75 விழுக்காடாக உயர்த்தும் இலக்கினை அடைந்திடவும், வேளாண் பெருமக்களின் வருவாயைப் பன்மடங்காக உயர்த்திடவும் தமிழக அரசு பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது.

அந்த வகையில், தமிழ்நாடு மாநில விற்பனை வாரியம் மூலம் அரியலூர் மாவட்டம் - ஆண்டிமடம் மற்றும் ஜெயங்கொண்டம், கோயம்புத்தூர் மாவட்டம் – கிணத்துக்கடவு மற்றும் செஞ்சேரி, தொண்டாமுத்தூர், கடலூர் மாவட்டம் – பண்ருட்டி மற்றும் சேத்தியாதோப்பு, கிருஷ்ணகிரி மாவட்டம் – போச்சம்பள்ளி மற்றும் ஊத்தங்கரை, திண்டுக்கல் மாவட்டம் – திண்டுக்கல், வத்தலக்குண்டு, ஒட்டன்சத்திரம் மற்றும் வடமதுரை (அய்யலூர்), ஈரோடு மாவட்டம் – நாதிபாளையம், காஞ்சிபுரம் மாவட்டம் – உத்திரமேரூர், கள்ளக்குறிச்சி மாவட்டம் – கள்ளக்குறிச்சி, சங்கராபுரம் மற்றும் தியாகதுருகம், மதுரை மாவட்டம் – மேலூர்,

நாகப்பட்டினம் மாவட்டம் – செம்பணார்கோயில் மற்றும் திருப்பூண்டி, புதுக்கோட்டை மாவட்டம் – ஆலங்குடி மற்றும் அறந்தாங்கி, ராமநாதபுரம் மாவட்டம் – ராமநாதபுரம் மற்றும் ராசசிங்கமங்கலம், சேலம் மாவட்டம் – கருமந்துறை, சிவகங்கை மாவட்டம் – சிவகங்கை, தேவக்கோட்டை மற்றும் காரைக்குடி, தஞ்சாவூர் மாவட்டம் – பூதலூர், திருவள்ளூர் மாவட்டம் – திருவள்ளூர், திருத்தணி மற்றும் ஊத்துக்கோட்டை, திருப்பூர் மாவட்டம் – அவினாசி, காங்கேயம் மற்றும் பெதப்பம்பட்டி,

திருவாரூர் மாவட்டம் – மன்னார்குடி மற்றும் திருத்துறைப்பூண்டி, தேனி மாவட்டம் – தேனி, திருவண்ணாமலை மாவட்டம் – ஆரணி, சேத்துப்பட்டு, செய்யாறு, கண்ணமங்கலம், மங்களமாமண்டூர், வந்தவாசி மற்றும் வேட்டவலம், தூத்துக்குடி மாவட்டம் – விளாத்திகுளம், விருதுநகர் மாவட்டம் – அருப்புக்கோட்டை, ராஜபாளையம் மற்றும் சாத்தூர் ஆகிய இடங்களிலுள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் 147 கோடியே 78 லட்சத்து 44 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள சேமிப்புக் கிடங்குகள், ஏலக்கூடங்கள், சுத்தப்படுத்தித் தரம் பிரிக்கும் கூடங்கள், விவசாயிகளுக்கான ஓய்வு அறைகள் மற்றும் விற்பனை அலுவலகங்கள்;

கிருஷ்ணகிரி மாவட்டம் – பர்கூர், திருவள்ளூர் மாவட்டம் – மீஞ்சூர், வேலூர் மாவட்டம் – பேர்ணாம்பட்டு, மதுரை மாவட்டம் – சேடப்பட்டி, புதுக்கோட்டை மாவட்டம் – ஆவுடையார்கோயில் மற்றும் திருமயம், கடலூர் மாவட்டம் – பரங்கிப்பேட்டை, விருதுநகர் மாவட்டம் – வெம்பக்கோட்டை, திருவண்ணாமலை மாவட்டம் – செங்கம், திண்டுக்கல் மாவட்டம் – நத்தம் மற்றும் நிலக்கோட்டை ஆகிய இடங்களில் 22 கோடியே 60 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையங்கள்;

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் திருச்சிராப்பள்ளி – அன்பில் தர்மலிங்கம் வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் 4 கோடியே 96 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள முதுநிலை பட்டப்படிப்பு மாணவர்களுக்கான மையம், புதுக்கோட்டை மாவட்டம், வம்பன்- தேசிய பயறு ஆராய்ச்சி நிலையத்தில் 5 கோடியே 45 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள வகுப்பறைகள், ஆய்வகங்களுடன் கூடிய நிர்வாகக் கட்டிடம் மற்றும் மாணவர்கள் படிப்பு மையம், கன்னியாகுமரி மாவட்டம், பேச்சிப்பாறை – தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையத்தில் 1 கோடியே 94 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மாணவியர் படிப்பு மையம், விரிவுரை அரங்கம் மற்றும் தேர்வு அறை; விருதுநகர் மாவட்டம் – ஸ்ரீவில்லிபுத்தூரில் 1 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள வேளாண்மைப் பொறியியல் விரிவாக்க மையம் என மொத்தம் 183 கோடியே 73 லட்சத்து 44 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்களைத் தமிழக முதல்வர் திறந்து வைத்தார்''.

இவ்வாறு தமிழக அரசு தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x