

நேபாளத்தில் நடைபெறும் கால்பந்து போட்டிக்கு விழுப்புரத்தைச் சேர்ந்த கால்பந்து அணியினர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
கோவா மினி ஃபுட் பால் அசோசியேசன் சார்பில் 14, 19 மற்றும் 22 வயதுக்கு உட்பட்டோருக்கான தேசிய மினி புட்பால் போட்டிகள் கடந்த சில நாட்களுக்கு முன் நடைபெற்றது.
இப்போட்டியில் தமிழகம், கேரளா, ஆந்திரம் உள்ளிட்ட 16 மாநிலங்களைச்சேர்ந்த அணிகள் பங்கேற்றன.இதில் விழுப்புரத்தைச் சேர்ந்த மாஸ்டர் கல்பந்து அணியினர் கடந்த அக்டோபர் 10 ஆம் தேதி மாவட்ட அளவில் கரூரில் நடைபெற்ற போட்டியில் வெற்றி பெற்று 20 ஆம் தேதி கோவாவில் நடைபெற்ற போட்டியில் வெற்றி பெற்றனர்.
இப்போட்டியில் வெற்றி பெற்ற 11 கால்பந்துவீரர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இவர்கள் வருகின்ற 26 ஆம் தேதி முதல் 29 ஆம் தேதிவரை நேபாளம் பொக்காராவில் உள்ள பொக்காரா ரங்கசாலா மைதானத்தில் நடைபெற உள்ள சர்வதேச போட்டிக்கு தேர்வாகியுள்ளனர்.
இப்போட்டியில் தமிழகம், கேரளா, ஆந்திரா உட்பட 16 மாநிலங்களைச் சேர்ந்த அணியினர் பங்கேற்கின்றனர்.
தமிழக அளவில் தேர்வு செய்யப்பட்டுள்ள மாஸ்டர் கால்பந்து அணியினர் வருகின்ற 23ஆம் தேதி நேபாளத்திற்கு பயிற்சியாளர்கள் தண்டபாணி, ஜேம்ஸ் வசந்த் ஆகியோருடன் புறப்படுகின்றனர்.
இவர்களின் வழிச்செலவுகளுக்காக விழுப்புரம் எம்எல்ஏ லட்சுமணன், முன்னாள் நகர் மன்ற தலைவர் ஜனகராஜ், மாநில விவசாய அணி துணை அமைப்பாளர் அன்னியூர் சிவா ஆகியோர் தலா ரூ.50 ஆயிரம் என திமுகவினர் அளித்த மொத்தம் ரூ 2.05 லட்சம் தொகையினை பயிற்சியாளர்களிடம் அளித்து வாழ்த்து தெரிவித்தனர்.