

வாக்காளர்கள் தாங்கள் வாக்களித்ததை சரிபார்த்துக் கொள்வதற்காக ‘விவிபிஎடி’ இயந்திரம் காஞ்சி புரம் சட்டப்பேரவைத்தொகுதியில் முதல் முறையாகப் பயன்படுத்தப்பட உள்ளதாக, மாவட்ட ஆட்சியர் கஜலட்சுமி தெரிவித்துள்ளார்.
வரும் சட்டப்பேரவைத் தேர்த லில் யாருக்கு வாக்களித்தோம் என்பதை வாக்காளர்கள் அறிந்து கொள்ளும் விவிபிஏடி எனும் புதிய மின்னணு இயந்திரம் தமிழ கத்தில் அறிமுகப் படுத்தப்படவுள் ளது. இதைத் தொடர்ந்து காஞ்சி புரம் சட்டமன்றத் தொகுதியில் ‘விவிபிஏடி’ இயந்திரம் தொடர்பாக, வாக்காளர்களுக்கு விழிப்பு ணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி கீழம்பி பகுதியில் உள்ள கிருஷ்ணா கலைக் கல்லூரியில் நேற்று நடைபெற்றது.
இதில், மாவட்ட ஆட்சியர் கஜலட்சுமி, துணை ஆட்சி யர் அருண் தம்புராஜ் ஆகியோர் கலந்துகொண்டனர். விவிபிஎடி இயந்திரம் தொடர்பாக வாக்காளர் கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், நான்கு கல்லூரிகளைச் சேர்ந்த 3 ஆயிரம் மாணவர்கள் ஒருங்கிணைந்து ‘விவிபிஎடி’ என்ற எழுத்து வடிவில் அணிவகுத்து நின்றனர்.
இதை தொடர்ந்து, பத்திரிகை யாளர்களைச் சந்தித்த மாவட்ட ஆட்சியர் கஜலட்சுமி கூறியதாவது: ‘விவிபிஎடி’ முறை என்பது மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களின் செயல்பாட்டுத் தன்மையை சுயேச் சையாக சரிபார்ப்பது. இதை நடைமுறைபடுத்துவதன் மூலம் வாக்காளர்கள், தங்களது வாக்கு கள் தாங்கள் தேர்வு செய்த வேட் பாளருக்குத்தான் பதிவு செய்யப் பட்டுள்ளதா என சரிபார்த்துக் கொள்ள முடியும்.
மேலும், வாக்குகள் மாற்றப்படுவதையும் அழிப்பதையும் தடுக்கலாம். இந்த இயந்திரம், காஞ்சிபுரம் மாவட்டத்தில், காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதியில் உள்ள 122 மையங்களில் உள்ள 316 வாக்குச் சாவடிகளில் மட் டுமே பயன்படுத்தப்படுகிறது. இதற் காக 397 விவிபிஎடி இயந்திரம் காஞ்சிபுரத்துக்குக் கொண்டுவரப் பட்டுள்ளது. மக்கள் கூடும் இடங் களில் சோதனை முறையில் இந்த இயந்திரம் இயக்கி காட்டப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.