

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட விரும்பும் பாஜகவினர் வரும் 21-ம் தேதி முதல் விருப்ப மனு அளிக்கலாம் என்று மாநிலத் தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை:
விரைவில் நடக்க உள்ள நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட விரும்பும் பாஜகவினரிடம் இருந்து நவ.21-ம் தேதி முதல்26-ம் தேதி வரை விருப்ப மனுக்கள் பெறப்பட உள்ளன.
மாநகராட்சி வார்டுகளுக்கு ரூ.3 ஆயிரம், நகராட்சி வார்டுகளுக்கு ரூ.2 ஆயிரம், பேரூராட்சி வார்டுகளுக்கு ரூ. 1,000 விருப்ப மனு கட்டணமாக செலுத்த வேண்டும். பெண்கள், பட்டியலினத்தவருக்கு ஒதுக்கப்பட்ட வார்டுகளுக்கு 50% கட்டணம் செலுத்தினால் போதும்.
சென்னை மாநகராட்சியின் 200 வார்டுகளுக்கும் தியாகராய நகரில் உள்ள கட்சியின் மாநிலத் தலைமை அலுவலகத்தில் நானும்,மாநில துணைத் தலைவர் வி.பி.துரைசாமியும் விருப்ப மனுக்களைப் பெற்றுக்கொள்கிறோம்.
ஆவடி மாநகராட்சிக்கு கு.க.செல்வம், மாநில செயலாளர் டால்பின் தரன், தாம்பரம் மாநகராட்சிக்கு மாநில துணைத் தலைவர் எம்.சக்கரவர்த்தி, மாநிலச் செயலாளர் சுமதி வெங்கடேஷ், ஓபிசி அணி மாநிலத் தலைவர் லோகநாதன், காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு எச்.ராஜா, முன்னாள் எம்எல்ஏ காயத்ரி தேவி, சேலம் மாநகராட்சிக்கு சி.பி.ராதாகிருஷ்ணன், முன்னாள் எம்.பி. நரசிம்மன், கோவை மாநகராட்சிக்கு மாநில துணைத் தலைவர் கே.எஸ்.நரேந்திரன், மாநில செயலாளர் மலர்க்கொடி, திருப்பூர் மாநகராட்சிக்கு வானதி சீனிவாசன், முன்னாள்எம்.பி. கார்வேந்தன், நாகர்கோவில்மாநகராட்சிக்கு நயினார் நாகேந்திரன், மாநில செயலாளர் உமாரதி ராஜன் ஆகியோர் விருப்ப மனுக்களைப் பெறுவார்கள்.