

பழநி முருகன் கோயில் தேவஸ்தானத்தினர் வரும் 20-ம் தேதி சர்க்கரை கொள்முதல் செய்ய வரவுள்ளதாக கவுந்தப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
ஈரோடு மாவட்டம் கோபி, கவுந்தப்பாடி பகுதியில் விளைவிக்கப்படும் கரும்பில் இருந்து தயாரிக்கப்படும் நாட்டுச் சர்க்கரை, பழநி முருகன் கோயில் பிரசாதமான பஞ்சாமிர்தம் தயாரிக்க கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில், வரும் 20-ம் தேதி காலை 11 மணிக்கு, பழநி தேவஸ்தான நிர்வாகத்தினர், கரும்புச் சர்க்கரை கொள்முதல் செய்ய வரவுள்ளதாக கவுந்தப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
எனவே, விவசாயிகள் தங்களதுசர்க்கரையை சணல் நாரால் தைத்தமூட்டையில் எடுத்து வரலாம் எனவும், கூடுதல் விவரங்களுக்கு 99445 23556, 04256 240383 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.