

தமிழக அரசின் போக்குவரத்துத் துறை சிறப்புச் செயலராக இருந்த எஸ்.நடராஜன், போக்குவரத்து ஆணையாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
போக்குவரத்து ஆணையாளராக இருந்த சந்தோஷ் கே. மிஸ்ரா விருப்ப ஓய்வு பெற்றுள்ளதை அடுத்து எஸ்.நடராஜன் அந்தப் பணியிடத்துக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இது தொடர்பான உத்தரவை தலைமைச் செயலர் வெ.இறையன்பு பிறப்பித்துள்ளார்.