Published : 08 Mar 2016 08:51 AM
Last Updated : 08 Mar 2016 08:51 AM

வெல்பேர் பார்ட்டி வேட்பாளர்கள்

வெல்பேர் பார்ட்டி ஆஃப் இந்தியா (டபிள்யு.பி.ஐ.) கட்சி 4 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்துள்ளது.

இக்கட்சியின் மாநில செயற்குழுக் கூட்டம் திருச்சியில் நேற்று முன்தினம் நடைபெற்றது. மாநிலத் தலைவர் சிக்கந்தர் தலைமை வகித்தார். தேசிய செயலாளர் சுப்பிரமணி, மாநிலப் பொதுச் செயலாளர் அப்துல்ரகுமான் முன்னிலை வகித்தனர்.

இதில், சட்டப்பேரவைத் தேர்தலுக்கான முதல்கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டது. கோவை தொண்டாமுத்தூர் தொகுதிக்கு எஸ்.என்.சிக்கந்தர், திருச்சி மேற்கு தொகுதிக்கு ஜமால் முகமது, வாணியம்பாடி தொகுதிக்கு டி.இஸ்மாயில், கிருஷ்ணகிரி தொகுதிக்கு சையது நசீர் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். அடுத்தகட்ட பட்டியல் விரைவில் வெளியிடப்படும் என்று கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x