133-வது பிறந்தநாளை முன்னிட்டு முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு படத்துக்கு தமிழக ஆளுநர் ரவி, அமைச்சர்கள் மரியாதை

முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் 133-வது பிறந்த நாளையொட்டி, சென்னை கிண்டி கத்திப்பாரா சந்திப்பில் உள்ள அவரது சிலைக்கு கீழ் வைக்கப்பட்டிருந்த படத்துக்கு மலர்கள் தூவி மரியாதை செலுத்தினார் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி. அருகில், அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், மு.பெ.சாமிநாதன், மா.சுப்பிரமணியன், எம்.பி.க்கள் டி.ஆர்.பாலு, தமிழச்சி தங்கபாண்டியன்.படம்: பு.க.பிரவீன்

Updated on
1 min read

முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு பிறந்தநாளை முன்னிட்டு, அவரது படத்துக்கு தமிழகஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் அமைச்சர்கள், காங்கிரஸ் தலைவர்கள் மரியாதை செலுத்தினர்.

நாட்டின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் 133-வது பிறந்தநாள் நேற்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. இதையொட்டி, கிண்டி கத்திப்பாரா சந்திப்பில் நேரு சிலைக்கு கீழே மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த அவரது உருவப் படத்துக்கு தமிழகஅரசு சார்பில் ஆளுநர்ஆர்.என்.ரவி மலர்கள் தூவி மரியாதை செலுத்தினார்.

இந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், மு.பெ.சாமிநாதன், மா.சுப்பிரமணியன், தமிழ் வளர்ச்சி, செய்தி துறை செயலர் மகேசன் காசிராஜன், எம்.பி.க்கள் டி.ஆர்.பாலு, தமிழச்சி தங்கபாண்டியன், அசன் மவுலானா எம்எல்ஏ உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இதேபோல, தமிழ்நாடு காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் நடந்தநிகழ்ச்சியில் நேருவின் படத்துக்குகட்சியின் மாநில தலைவர்கே.எஸ்.அழகிரி மலர்கள் தூவிமரியாதை செலுத்தினார்.

இந்த நிகழ்ச்சியில், முன்னாள் தலைவர்கள் ஈவிகேஎஸ் இளங்கோவன், கே.வீ.தங்கபாலு, கே.ஜெயக்குமார் எம்.பி., சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை மற்றும் காங்கிரஸ் எம்எல்ஏக்கள், மாவட்டநிர்வாகிகள் கலந்து கொண்டனர். தென்சென்னை மாவட்ட காங்கிரஸ் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in