ஒருங்கிணைந்த பாதுகாப்பு படை, தேசிய பாதுகாப்பு அகாதமி, கடற்படை அகாதமி தேர்வுகள்: புதுச்சேரியில் 50 சதவீதத்துக்கு மேல் பங்கேற்கவில்லை

புதுச்சேரியில் தேர்வெழுத வந்தவர்களை பரிசோதனை செய்யும் ஊழியர்.
புதுச்சேரியில் தேர்வெழுத வந்தவர்களை பரிசோதனை செய்யும் ஊழியர்.
Updated on
1 min read

புதுச்சேரியில் ஒருங்கிணைந்த பாதுகாப்பு படை தேர்வு-2, தேசிய பாது காப்பு அகாதமி மற்றும் கடற்படை அகாதமி தேர்வு-2 ஆகிய மூன்று தேர்வுகளில் 50 சதவீதத்துக்கு மேல் பங்கேற்கவில்லை.

மத்திய பணியாளர் தேர்வாணை யம் நடத்தும் ஒருங்கிணைந்த பாதுகாப்பு படை தேர்வு-2, தேசிய பாதுகாப்பு அகாதமி மற்றும் கடற்படை அகாதமி தேர்வு-2 ஆகி யவை நேற்று நாடு முழுவதும் நடந்தது. இத்தேர்வுக்கு புதுச்சேரி மாநிலமும் ஒரு தேர்வு மையமாக தேர்வு செய்யப்பட்டு 3 இடங்களில் தேர்வு நடந்தது.

ஒருங்கிணைந்த பாதுகாப்புபடை தேர்வு-2 லாஸ்பேட்டை விவே கானந்தா மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. காலை 9 மணி முதல் 11 மணி வரை, மதியம் 12 மணி முதல் 2 மணி வரை, மதியம் 3 மணி முதல் மாலை 5 மணி வரை என மூன்று அமர்வுகளாக தேர்வு நடந்தது. இத்தேர்வெழுத 225 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில் 106 (47.11 சதவீதம்) பேர் மட்டும் பங்கேற்று தேர்வெழுதினர். 119 (52.88 சதவீதம்) பேர் தேர்வில் கலந்து கொள்ளவில்லை.

அதேபோல், தேசிய பாதுகாப்பு அகாதமி மற்றும் கடற்படை அகாதமி தேர்வு-2 லாஸ்பேட்டை வள்ளலார் மேல்நிலைப்பள்ளி மற் றும் விவேகானந்தா மேல்நிலைப் பள்ளியில் நடந்தது. காலை 10 மணி முதல் மதியம் 12.30 மணி வரை, மதியம் 2 மணி முதல் மாலை4.30 மணி வரை என இரண்டு அமர்வுகளாக இத்தேர்வு நடந்தது. தேர்வெழுத 187 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில் 80 (42.78 சதவீதம்) பேர் மட்டும் கலந்து கொண்டனர். 107 (57.21சதவீதம்) பேர் தேர்வில் பங்கேற்கவில்லை.

இந்த இரு தேர்வுகளையும் சேர்த்து மொத்தமாக 412 பேர் தேர்வெழுத விண்ணப்பித்திருந்த நிலையில் 186 (45.15 சதவீதம்) பேர் மட்டும்தான் தேர்வெழுதினர். 226 (54.85 சதவீதம்) பேர் தேர்வுக்கு வரவில்லை.

தேர்வு எழுதுவோர் வசதிக்காக புதுச்சேரி பேருந்து நிலையத்தில் இருந்து தேர்வு மையங்களுக்கு காலை 7.30 மணி முதல் 9.30 மணிவரை சிறப்பு பேருந்துங்கள் இயக்கப்பட்டன.

அதேபோல், தேர்வு முடிந்த பிறகு தேர்வு மையத்திலிருந்து மீண்டும் பேருந்து நிலையத் திற்கு செல்லவும் சிறப்பு பேருந்து கள் இயக்கப்பட்டன. தேர்வு தொடங்க 10 நிமிடங்களுக்கு முன்பு தேர்வு மையங்களுக்கு வருமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது. அதன்பிறகு வந்தவர்கள் யாரும் தேர் வெழுத அனுமதிக்கப்படவில்லை. தேர்வு மையங்களில் தேர்வர்கள் மெட்டல் டிடெக்டர் மூலம் சோதனைசெய்த பிறகு அனுமதிக்கப்பட்டனர். சமூக இடைவெளியுடன் முகக்க வசம் அணிந்து தேர்வெழுதினர்.

இத்தேர்வை அரசு செயலரும், தேர்வு ஒருங்கிணைப்பு கண் காணிப்பாளருமான அசோக்குமார் கண்காணித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in