

காங்கிரஸ் எம்.எல்.ஏ.விஜய தரணியின் கணவர் சிவகுமார் கென்னடியின் உடலுக்கு திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் ஆகியோர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.
விளவங்கோடு தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ.வும், மகிளா காங்கிரஸ் அகில இந்திய பொதுச் செயலாளருமான விஜயதரணியின் கணவர் சிவகுமார் கென்னடி நேற்று முன் தினம் மாரடைப்பால் மரணமடைந்தார். 50 வயதான சிவகுமார் கென்னடி வழக்கறிஞராக இருந்தார்.
சென்னை முகலிவாக்கம் பூத்தப்பேட்டில் உள்ள சிவகுமார் கென்னடியின் வீட்டில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், காங்கிரஸ் அகில இந்திய செய்தி தொடர்பாளர் குஷ்பு மற்றும் காங்கிரஸ் மாவட்ட நிர்வாகிகள் ஆகியோர் நேரில் அஞ்சலி செலுத்தினர். சிவகுமார் கென்னடியின் உடல் தகனம் இன்று நடக்கவுள்ளதாக அவரது குடும்பத்தினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.