தொடர் மழை காரணமாக செடியிலேயே கருகும் மல்லிகை பூக்கள்: வரத்துக் குறைவால் கிலோ ரூ.2500-க்கு விற்பனை

நிலக்கோட்டை அருகே  மல்லிகைச் செடியில் கருகி யுள்ள மொட்டுகள். (உள்படம்) விவசாயி முருகேசன்.
நிலக்கோட்டை அருகே மல்லிகைச் செடியில் கருகி யுள்ள மொட்டுகள். (உள்படம்) விவசாயி முருகேசன்.
Updated on
1 min read

திண்டுக்கல் மாவட்டத்தில் தொடர் மழை எதிரொலியாக செடியிலேயே மல்லிகை பூக்கள் கருகுகின்றன. இதனால் விவசாயிகளுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.

நிலக்கோட்டை, வத்தலகுண்டு மற்றும் திண்டுக்கல் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மலர் சாகுபடி அதிகப் பரப்பில் நடந்து வருகிறது.

வெயில் காலம்தான் மல்லிகைப் பூக்களுக்கு ஏற்ற பருவம். மாவட் டத்தில் வடகிழக்குப் பருவ மழை தொடர்ந்து பரவலாக பெய்து வருகிறது. இதனால் மலர் சாகுபடி அடியோடு பாதிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக மல்லிகைப்பூ செடி களில் கருகல் நோய் தாக்கி மொட்டுகள் கருகி வருகின்றன. நோய் தாக்குதலால் பூக்கள் அழுகியும் விடுகின்றன. இதனால் பூக்கள் அறுவடை செய்ய முடியாத நிலையில் விவசாயிகளுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து மலர் சாகுபடி செய்யும் விவசாயி முருகேசன் கூறும்போது, அதிகாரிகள் ஆய்வு செய்து மல்லிகை விவசாயி களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். செடிகளில் ஏற்படும் கருகல் நோய் தாக்குதலை கட்டுப்படுத்த தோட்டக்கலை துறையினர் நட வடிக்கை எடுக்க வேண்டும் என்றார். பூ மார்க்கெட்டுக்கு மல்லிகை வரத்து குறைவாகவே உள்ளது. முகூர்த்த தினமான நேற்று ஒரு கிலோ ரூ.2500-க்கு விற்பனையானது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in