Published : 25 Mar 2016 12:02 PM
Last Updated : 25 Mar 2016 12:02 PM

ஆண்டுதோறும் நாய்க்கடிக்கு ஆளாகும் 6 லட்சம் பேர்: மருத்துவச் சிகிச்சைக்கு ரூ.12 கோடி ஒதுக்கும் தமிழக அரசு

தமிழக அரசு மருத்துவமனைகளில் ஒவ்வொரு ஆண்டும் 6 லட்சத்துக்கும் மேற் பட்டவர்கள், நாய்க்கடியால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுகின்றனர்.

இவர்களுடைய நாய்க்கடி மருந்து சிகிச்சைக்காக, ஒவ்வொரு ஆண்டும் மொத்தம் ரூ. 12 கோடிக்கு மேல் தமிழக அரசு நிதி ஒதுக் குகிறது.

வீடுகளில் கவுரவத்துக்காகவும், காவலு க்காகவும் சமீப காலமாக நாய்கள் வளர்க்கும் போக்கு அதிகரித்துள்ளது. இவைதவிர தெருநாய்களை கட்டுப்படுத்த உள்ளாட்சி அமைப்புகள் நடவடிக்கை எடுக்காததால், அவற்றின் எண்ணிக்கையும் பல மடங்கு அதிகரித்துள்ளது.

அதனால் குழந்தைகள், முதியோர், பெண்கள் அதிகளவு நாய்க்கடிக்கு ஆளாகி, அரசு மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்கு வருவது அதிகரித்துள்ளது. இவர்களுக்கான மருத்துவச் சிகிச்சை செலவுக்காக ஒதுக்கப்படும் நிதியும் ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது.

இதுகுறித்து மதுரை சுகாதாரச் செயற்பாட்டாளர் சி. ஆனந்தராஜ் கூறிய தாவது: உலக அளவில், ஒவ்வொரு ஆண்டும் 55 ஆயிரம் பேர் நாய்க்கடியால் ராபிஸ் நோய் தாக்கி இறக்கின்றனர். இந்தியாவில், ஆண்டுக்கு சுமார் 20,000 ஆயிரம் பேர் உயிரிழக்கின்றனர். இவர்களில் 40 சதவீதம் தெருவில் விளையாடும் பள்ளிக் குழந்தைகளே இறப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை, மாவட்ட தலைமை மருத்துவமனைகள், தாலுகா மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் சேர்த்து சுமார் 80 ஆயிரம் பேர் நாய்க்கடியால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு வந்துள்ளனர். கோயமுத்தூர் அரசு மருத்துவமனையில் கடந்த 2010-ல் 32,961 பேர் நாய்க்கடிக்கு ஆளாகி சிகிச்சை பெற்றனர். இந்த எண்ணிக்கை 2015-ல் 34,657 ஆக அதிகரித்துள்ளது.

ஒவ்வொரு மாவட்டத்திலும் சென்னை, திருச்சி, மதுரை, திருநெல்வேலி, சேலம் உள்ளிட்ட பெரு நகரங்கள் மற்றும் கிராமப் புறங்களை கணக்கிட்டால் குறைந்தபட்சம் ஆண்டுக்கு 6 லட்சம் பேர் நாய்க்கடியால் பாதிக்கப்படுகின்றனர்.

2015-ம் ஆண்டு மாநில சுகாதாரத்து றையின் தமிழ்நாடு மருத்துவச்சேவை கழகம், அனைத்து அரசு மருத்துவமனைகளுக்கும் நாய்க்கடியின்போது போடக்கூடிய ரேபிஸ் தடுப்பு மருந்து மட்டும் ரூ.10.84 கோடிக்கு வழங்கி உள்ளது. ஒவ்வொரு மருந்தின் விலை ரூ.125 ஆகும். தீவிரமான காயமடைந்தவர்களுக்கு மருந்து வாங்க ரூ.1.70 கோடி வழங்கப்பட்டுள்ளது. இந்த மருந்தின் விலை ரூ. 327 ஆகும்.

மொத்தத்தில் கடந்த ஆண்டு மட்டும் நாய்க்கடி சிகிச்சைக்கு ரூ. 12.63 கோடி செலவு செய்துள்ளது.

ஒருபுறம் நாய்க்கடியால் பாதிக்கப்பட் டவர்களின் எண்ணிக்கை உயர்ந்துவரும் நிலையில், மறுபுறம் ரேபிஸ் தடுப்பூசி மருந்துகளின் தேவையும் அதிகரித்துள்ளது. தமிழக அரசு தெருநாய்களைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x