Published : 16 Mar 2016 08:50 AM
Last Updated : 16 Mar 2016 08:50 AM

விவசாயியை தாக்கியோரை கைது செய்ய வலியுறுத்தி தஞ்சாவூர் எஸ்பி முகாம் அலுவலகம் முன்பு மறியல்: இடதுசாரி விவசாய சங்கத்தினர் கைது

கடன் நிலுவைக்காக தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயி பாலனைத் தாக்கி, டிராக்டரை பறித் துச் சென்ற போலீஸார், தனியார் வங்கியின் ஊழியர்கள் மற்றும் அடியாட்களை கைது செய்ய வலியுறுத்தி இடதுசாரி விவசாயிகள் சங்கத்தினர், தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் முகாம் அலுவலகம் எதிரில் நேற்று மறியல் போராட்டத்தில் ஈடுபட சென்றனர்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு விவசாயிகள் சங்கப் பொதுச் செயலாளர் வே.துரைமாணிக்கம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு விவசாயிகள் சங்கப் பொதுச் செய லாளர் பெ.சண்முகம் ஆகியோர் தலைமையில் போராட்டத்தில் ஈடு பட முயன்றவர்களை மணிமண்டபம் அருகில் போலீஸார் தடுத்து நிறுத் தினர்.

இதனால், அங்கு போலீஸாருக் கும், விவசாய சங்கத்தினருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. விவசாயி கள் சங்கத்தினரை தஞ்சாவூர் டிஎஸ்பி இளங்கோவன் சமாதா னம் செய்தார். எனினும், குற்றவாளி களை கைது செய்யும் வரை போராட்டம் தொடரும் என கூறி சாலை மறியலில் ஈடுபட்டனர். இதை யடுத்து, விவசாயி பாலன், சங்கங் களின் மாவட்ட நிர்வாகிகள் சாமி.நடராஜன், பாலசுந்தரம், பன்னீர் செல்வம் உள்ளிட்ட 75 பேரை போலீஸார் கைது செய்தனர்.

தஞ்சை விவசாயியை தாக்கிய நிதி நிறுவனத்தின் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி திருவாரூரில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் த.ரங்கராஜன், செயலாளர் பி.எஸ்.மாசிலாமணி ஆகியோர் தலைமை வகித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x