காரைக்குடியில் போலீஸார் குடியிருப்பில் துணிகரம்: உதவி ஆய்வாளர் மனைவியை கட்டிப்போட்டு 30 பவுன் நகை, ரூ.80 ஆயிரம் திருட்டு - இன்ஸ்பெக்டர் வீட்டிலும் கைவரிசை

காரைக்குடியில் போலீஸார் குடியிருப்பில் துணிகரம்: உதவி ஆய்வாளர் மனைவியை கட்டிப்போட்டு 30 பவுன் நகை, ரூ.80 ஆயிரம் திருட்டு - இன்ஸ்பெக்டர் வீட்டிலும் கைவரிசை
Updated on
1 min read

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி யில் போலீஸார் குடியிருப்பில் நேற்று முன்தினம் இரவு புகுந்த மர்மக் கும்பல், சிறப்பு எஸ்.ஐ. மனைவியை கட்டிப்போட்டு 30 பவுன் நகைகள், ரூ.80 ஆயிரத்தை திருடினர். பின்னர் மாடியில் வசிக்கும் இன்ஸ்பெக்டர் வீட்டில் ரூ.5 ஆயிரத்தை திருடினர். அதைத் தொடர்ந்து மற்றொரு வீட்டில் திருட முயன்றபோது எது வும் கிடைக்காததால், தனியாக இருந்த பெண்ணை பலாத்காரம் செய்ய முயற்சி செய்துவிட்டு தப்பிச் சென்றனர்.

காரைக்குடி தெற்கு காவல் நிலைய இன்ஸ்பெக்டர் அழகர் சாமி. இங்கு சிறப்பு எஸ்.ஐ.யாக சிங்கராயர் உள்ளார். இவர்களது வீடு தமிழ்த்தாய் கோயில் சாலை யில் போலீஸார் குடியிருப்பு வளாகத்தில் உள்ள எஸ்.ஐ. குடியிருப்பில் உள்ளது.

இக்குடியிருப்பில் சிறப்பு எஸ்.ஐ. சிங்கராயர் கீழ்தளத்திலும், இன்ஸ்பெக்டர் அழகர்சாமி மாடி வீட்டிலும் வசிக்கின்றனர். இவர் கள் இருவரும் நேற்று முன்தினம் இரவு ரோந்துப் பணிக்குச் சென் றனர்.

சிங்கராயர் வீட்டில் அவரது மனைவி சகாயம், பேரக் குழந்தை யோடு இருந்துள்ளார். நள்ளிரவில் மர்ம நபர்கள் வீட்டுக் கதவைத் தட்டியுள்ளனர். கணவர்தான் கதவைத் தட்டுகிறார் என நினைத்து சகாயம் திறந்துள்ளார். மர்ம நபர்கள் சகாயத்தை தலையில் தாக்கி கட்டிப் போட்டனர். சப்தம் போடாமல் இருக்க வாயில் துணியைக் கட்டி கத்தியைக் காட்டி மிரட்டினர்.

பின்னர் பீரோவில் இருந்த 30 பவுன் நகைகள், ரூ.80 ஆயிரம், லேப்டாப் ஆகியவற்றைத் திருடி னர். சப்தமிட்டால் கொலை செய்து விடுவதாக மிரட்டிச் சென்றனர்.

அதையடுத்து இன்ஸ்பெக்டர் அழகர்சாமி வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த மர்ம நபர்கள் அங்கிருந்த ரூ.5 ஆயிரத்தை திருடிச் சென்றனர்.

தொடர்ந்து இக்குடியிருப்புக்கு எதிரே உள்ள அண்ணாமலை செட்டியார் முதல் வீதியில் உள்ள ஒரு வீட்டில் புகுந்து திருட முயற்சி செய்தனர். பொருட்கள் எதுவும் கிடைக்காததால் வீட்டில் இருந்த பெண்ணை மிரட்டி பலாத்காரம் செய்ய முயன்றனர். அப்பெண் அவர்களது கையை கடித்து அலறல் சப்தம் போட்டதால் அங்கிருந்து தப்பினர்.

காலையில் பக்கத்து வீட்டுக் காரர்கள் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். சிவகங்கை மாவட்டக் காவல் ஆய்வாளர் ஜியாவுல்ஹக் சம்பவ இடத்துக்குச் சென்று ஆய்வு செய்தார்.

காரைக்குடி டிஎஸ்பி முத்தமிழ் தலைமையில் தனிப்படை போலீ ஸார் விசாரணை செய்து வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in